- Home
- Gallery
- அன்பே வா சீரியல் நடிகை ஸ்ரீகோபிகாவுக்கு பிரபல நடிகருடன் நிச்சயதார்த்தம்.. க்யூட் போட்டோஸ் இதோ..
அன்பே வா சீரியல் நடிகை ஸ்ரீகோபிகாவுக்கு பிரபல நடிகருடன் நிச்சயதார்த்தம்.. க்யூட் போட்டோஸ் இதோ..
பிரபல நடிகையும் மாடலுமான ஸ்ரீ கோபிகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீ கோபிகா ஓவியா நடித்த 90ML படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து Wolf என்ற படத்திலும் நடித்திருந்தார்.
தொடர்ந்து மாடலிங் செய்து வந்த அவர், சன் டிவியில் ஓளிபரப்பான சுந்தரி சீரியல் மூலம் அறிமுகமானார். இந்த சீரியல் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் ஸ்ரீ கோபிகா.
இதை தொடர்ந்து அன்பே வா சீரியலில் நடித்தார். இந்த சீரியலும் சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிலையில் நடிகை ஸ்ரீ கோபிகாவுக்கும் நடிகர் வைசாக் ரவி என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ 2016 முதல் எனது நண்பராக, காதலனாக இருக்கும் வைசாக் உடன் மகிழ்ச்சியாக அதிகாரப்பூர்வமாக நிச்சயம் செய்துவிட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.
விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ள ஸ்ரீகோபிகா - வைசாக் ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.