- Home
- Gallery
- அக்ஷய் குமாரின் Sarfira.. இன்று ஒளிபரப்பான ஸ்பெஷல் ஷோ - ஆசை கணவருடன் மாடர்ன் உடையில் வந்த ஜோ - Cool Pics!
அக்ஷய் குமாரின் Sarfira.. இன்று ஒளிபரப்பான ஸ்பெஷல் ஷோ - ஆசை கணவருடன் மாடர்ன் உடையில் வந்த ஜோ - Cool Pics!
Sudha Kongara : பிரபல இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள, நடிகர் அக்ஷய் குமாரின் Sarfira திரைப்படம் வரும் ஜூலை 12ம் தேதி வெளியாக உள்ளது.

Suriya
பிரபல இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் உதவி இயக்குனராக பணியாற்றி, "துரோகி" என்கின்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் சுதா கொங்கரா. இவருடைய இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக மாறி உள்ளது.
jyothika
இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பிரபல நடிகர் சூர்யா அவர்களை வைத்து "சுரரைப் போற்று" என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
sarfira
இந்நிலையில் அந்த திரைப்படத்தின் ஹிந்தி ரீமிக்கை வருகின்ற ஜூலை மாதம் 12ம் தேதி வெளியிடவிருக்கிறார் சுதா கொங்கரா. இன்று ஜூலை 9ம் தேதி Sarfira படத்தின் ஸ்பெஷல் ஷோ ஒளிபரப்பப்பட்டது.
sarfira movie
இதில் இப்படத்தின் தயாரிப்பாளர்களான பிரபல நடிகை ஜோதிகா, அவரது கணவர் சூர்யா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா ஆகியோரும் இந்த ஸ்பெஷல் ஷோவில் கலந்து கொண்டனர்.