"முக்கால்வாசி ஒர்க் ஓவர்.. சும்மா பட்டாசா அறிவிப்பு வரும் பாருங்க" STR48 பற்றிய கேள்விக்கு பதில் தந்த பிரபலம்!
Silambarasan : முதலில் சிலம்பரசனின் 48வது படமாக உருவாகவிருந்த தேசிங்கு பெரியசாமியின் அந்த படம், இப்பொது சிலம்பரசனின் 50வது படமாக உருவாகவுள்ளது.
Kannum kannum kollaiyadithal
கடந்த 2020ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் களமிறங்கியவர் தான் தேசிங்கு பெரியசாமி. அந்த திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே அலைபேசியில் தொடர்பு கொண்டு, தேசிங்கு பெரியசாமியை வாழ்த்தினார். அதுமட்டுமல்ல தன்னை வைத்து ஒரு படம் எடுக்கவேண்டும் என்றும் கூறினார்.
Simbu
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே திரைப்படங்களை இயக்காமல் இருந்து வந்த இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, ரஜினியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியான நிலையில், பிரபல நடிகர் சிலம்பரசனை அவர் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது. மேலும் அது சிலம்பரசனின் 48வது திரைப்படமாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.
Raj Kamal Films
இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான கமல்ஹாசனின் "ராஜ் கமல் பிலிம்ஸ்" நிறுவனம் அந்த திரைப்படத்தை தயாரிக்க முன்வந்தது. அதற்கான பணிகளும் வெளிநாடுகளில் தொடங்கியது, ஆனால் கடந்த ஆறு மாத காலமாகவே அந்த திரைப்படம் குறித்த எந்தவிதமான தகவலும் வெளியாகாமல் படம் கிடப்பில் கிடக்கிறது.
STR 50
இந்நிலையில் அந்த திரைப்படத்தில் பணியாற்றி வரும் ஆர்ட் டைரக்டர் ஒருவர் அளித்த பேட்டியில், சிலம்பரசனின் ஐம்பதாவது திரைப்படமாக உருவாக உள்ள அந்த திரைப்படத்தின் Pre Production பணிகள் 70% முடிந்துவிட்டது என்றும், விரைவில் பிரம்மாண்டமான முறையில் அப்படத்திற்கான அறிவிப்பு வரும் என்றும் கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் அஜித்தின் 32 ஆண்டுகள்; சோதனைகளை கடந்து என்ன சாதித்தார்?