இவருக்கு 40 வயசுன்னு சொன்னா எவனும் நம்ப மாட்டான்... சிம்புவின் யங் லுக் போட்டோஸ் பார்த்து மெர்சலான ரசிகர்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, யங் லுக்கில் லண்டனில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
simbu
நடிகர் சிம்பு என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் சிக்காத சர்ச்சைகளே இல்லை என சொல்லும் அளவுக்கு இவர் எதிர்கொண்ட பிரச்சனைகள் ஏராளம். அதையெல்லாம் தாண்டி இவர் உடல் எடை அதிகரித்ததன் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் சிம்புவுக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இதையடுத்து கொரோனா ஊரடங்கு சமயத்தில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்தார் சிம்பு.
simbu latest look
அதன்பின்னர் இவர் நடித்த மாநாடு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு, நடிகர் சிம்புவின் கெரியரிலேயே முதன்முறையாக ரூ.100 கோடி வசூலை வாரிக்குவித்த படமாகவும் மாநாடு அமைந்தது. மாநாடு வெற்றிக்கு பின்னர் வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல ஆகிய திரைப்படங்களில் நடித்தார் சிம்பு. இந்த இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்தது.
இதையும் படியுங்கள்... நயன்தாரா படத்தை பார்த்து ஷாக் ஆன சென்சார் அதிகாரிகள்... ஏ சான்றிதழ் வழங்கியதால் பரபரப்பு
simbu young look photos
இதையடுத்து சிம்பு நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் எஸ்.டி.ஆர் 48. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா குமார் பட பிரச்சனை காரணமாக கோர்ட்டில் கேஸ் நடைபெற்று வருவதன் காரணமாக எஸ்.டி.ஆர் 48 பட ஷூட்டிங் தாமதமாகி வருகிறது.
STR 48 hero simbu
இந்த நிலையில், லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிம்பு, அங்கு லண்டன் வீதிகளில் ஜாலியாக உலா வந்தபோது எடுத்த கேண்டிட் போட்டோஷூட் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது. நீண்ட தலைமுடி மற்றும் தாடியோடு, ஸ்டைலான ஜீன்ஸ் பேண்ட் ஷர்ட் அணிந்தபடி செம்ம மாஸாக இருக்கும் சிம்புவின் யங் லுக்கை பார்த்த ரசிகர்கள், இவருக்கு 40 வயசுனு சொன்னா எவனும் நம்ப மாட்டான் என கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திரையிடப்பட்ட ஜெயிலர் படம்.. திடீரென தியேட்டருக்குள் சிங்கநடை போட்டு வந்த ரஜினி