MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • யாரு எவங்க எல்லாம் பாக்காதீங்க! நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஓட்டினால் வாகனத்தை பறிமுதல் செய்க! கோர்ட் அதிரடி!

யாரு எவங்க எல்லாம் பாக்காதீங்க! நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஓட்டினால் வாகனத்தை பறிமுதல் செய்க! கோர்ட் அதிரடி!

நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களை பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Jun 07 2024, 06:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Number Plates

Number Plates

சென்னை மாநகரில் இயக்கப்படும் தனியார் வாகனங்களில் நம்பர் பிளேட்டுகளில் காவல்துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல் துறை சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை தமிழகம் முழுவதும் அமல்படுத்தக்கோரி சென்னையைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

24
chennai high court

chennai high court

அதில், கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு தமிழகத்தில் முறையாக அமல்படுத்தப்படவில்லை. வாகனங்களின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகளில் மதச் சின்னங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், நடிகர்களின் படங்களை ஒட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். குறிப்பாக அரசுப் பேருந்துகளின் பின்புறமும், பக்கவாட்டு பகுதிகளிலும் முழுவதுமாக ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரங்கள் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

34
Number Plates

Number Plates

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அந்த வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். மேலும், போக்குவரத்து விதிகளை மீறும் அரசியல்வாதிகளின் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்றார். 

44
Chennai Traffic Police

Chennai Traffic Police

மேலும், ஸ்டிக்கர்கள் ஒட்ட தடை விதித்தும், கார் கண்ணாடிகளில் கருப்பு நிறத்தில் கூலிங் ஸ்டிக்கர் ஒட்டியுள்ள வாகனங்களை சோதனை செய்ய வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்த வழக்கு தொடர்பாக ஜூன் 20ம் தேதி, விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனர். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை உயர் நீதிமன்றம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved