சென்னையில் பிரபல ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு.! உரிமம் ரத்து.! காரணம் என்ன தெரியுமா.?
சென்னை மாநகரில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த ஐந்து தனியார் நட்சத்திர ஹோட்டல்களின் மதுபானக் கூடங்கள் உரிமங்களை ரத்து செய்து உடனடியாக மூட மதுவிலக்குத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
நட்சத்திர விடுதி மதுபானக் கூடங்கள்
தமிழகத்தில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதை தவிர்த்து பிரபல தனியார் நட்சத்திர விடுதிகளும் ஏராளமாக தமிழக அரசிடம் அனுமதி பெற்று செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் F.L.3 மதுபானக் கூடங்கள் அரசு உரிமம் பெற்று இயங்கி வருகிறது.
இதில் நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர், தொழிலதிபர்கள் என உயர் வகுப்பை சேர்ந்தவர்கள் மது அருந்துவார்கள். இந்தநிலையில் சென்னையில் இயங்கி வந்த பிரபல நட்சத்திர விடுதியின் பார்களுக்கு தமிழக அரசு திடீரென உரிமத்தை ரத்து செய்துள்ளது.
100 கி.மீ. வேகம்; எக்கச்சக்க வசதிகளுடன் சென்னை - காட்பாடியில் சீறிப்பாய்ந்த வந்தே மெட்ரோ ரயில்
சட்ட விரோத மதுபான கூடம்
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகரில் உள்ள ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், விவிஏ ஹோட்டல்ஸ் (ரேடிசன் ப்ளு) ஹையத் ரீஜன்சி, தி பார்க் ஆகிய 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் F.L.3 மதுபானக் கூடங்கள் அரசு உரிமம் பெற்று இயங்கி வந்தன. அவற்றுள் சட்டவிதிகளுக்கு மாறாக வெளிநபர்களை மது அருந்த அனுமதித்துள்ளதாகவும், மேலும் மதுபானங்களை விநியோகம் செய்தல் முதலிய குற்றங்களில் ஈடுபட்டதாக தகவல் தெரியவந்தன.
மதுபான கூடங்கள் அனுமதி ரத்து
இதனையடுத்து சென்னை மாநகரில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் செயல்பட்டு வந்த மதுபானக் கூடங்களை நடத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த F.L.3 உரிமங்களைத் தற்காலிகமாக ரத்து செய்தும் அந்த மதுபானக் கூடங்களை உடனடியாக மூடவும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்ட மக்கள் தப்பி தவறி கூட குடை இல்லாமல் வெளியே போயிடாதீங்க.. வானிலை மையம் அலர்ட் மெசேஜ்!