- Home
- Gallery
- நேபாள் அணியை விட மோசமாக விளையாடிய இலங்கை – 2 போட்டியிலும் தோல்வி, சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுமா?
நேபாள் அணியை விட மோசமாக விளையாடிய இலங்கை – 2 போட்டியிலும் தோல்வி, சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுமா?
டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்த நிலையில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு குறைந்துள்ளது.

Sri Lanka vs Bangladesh, T20 World Cup 2024
டி20 உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து உள்பட 20 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. இந்த தொடரில் இலங்கை, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் கூட வெற்றிக்காக போராடி வருகின்றன.
Sri Lanka vs Bangladesh, T20 World Cup 2024
அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இலங்கை தோல்வி அடைந்து குரூப் டி பிரிவில் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்துள்ளது.
Sri Lanka vs Bangladesh, T20 World Cup 2024
குரூப் பிரிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில் இலங்கை விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது. எஞ்சிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் கூட சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Sri Lanka vs Bangladesh, T20 World Cup 2024
முதலில் இலங்கை விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 16.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Sri Lanka vs Bangladesh, T20 World Cup 2024
இதே போன்று இலங்கை விளையாடிய வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய வங்கதேச அணியாது 19 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது.
Sri Lanka vs Bangladesh, T20 World Cup 2024
இலங்கை அணியானது அடுத்து நேபாள் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 3 ஆவது இடம் பிடிக்கும்.
Sri Lanka vs Bangladesh, T20 World Cup 2024
இதுவே தென் ஆப்பிரிக்கா எஞ்சிய 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும், வங்கதேச அணி எஞ்சிய 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் சூப்பர் 8 சுற்றுக்கு சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இலங்கை சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.