- Home
- Gallery
- டிராபியை கைப்பற்றுவது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது - ஐபிஎல் டிராபியை வெல்வோம் – புவனேஷ்வர் குமார்!
டிராபியை கைப்பற்றுவது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது - ஐபிஎல் டிராபியை வெல்வோம் – புவனேஷ்வர் குமார்!
ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு வருவோம் என்ற உணர்வு எங்களுக்கு இருந்தது என்றும், ஐபிஎல் டிராபியை வெல்வோம் என்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் கூறியுள்ளார்.

IPL 2024 Final
சென்னையின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய லீக் மற்றும் முதல் குவாலிஃபையர் சுற்று போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியே வெற்றி பெற்றிருக்கிறது.
KKR vs SRH, IPL Final 2024
கடந்த மார்ச் 22 ஆம் தேதி 10 அணிகளுடன் பிரம்மாண்டமாக தொடங்கிய இந்த தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முன்னேறின.
KKR vs SRH, IPL 2024
இதில் 1 மற்றும் 2ஆவது இடம் பிடித்த கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் முதல் குவாலிஃபையர் சுற்றில் மோதின. இதில், கொல்கத்தா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 3 மற்றும் 4 இடங்களை பிடித்த ராஜஸ்தான் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் எலிமினேட்டர் சுற்று போட்டியில் மோதின. இதில், ராஜஸ்தான் வெற்றி பெற்று 2ஆவது குவாலிஃபையர் சுற்றுக்கு சென்றது.
Sunrisers Hyderabad
இதையடுத்து நடைபெற்ற 2ஆவது குவாலிஃபையர் சுற்று போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஹைதராபாத் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றது. கடைசியாக ஐபிஎல் 2024 தொடரின் அந்த தருணம் வந்துவிட்டது.
IPL Final 2024
சென்னையின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது.
Sunrisers Hyderabad
இதில், கொல்கத்தா வெற்றி பெற்றால் 3ஆவது முறையாக சாம்பியனாகும். இதுவே ஹைதராபாத் வெற்றி பெற்றால் 2ஆவது முறையாக சாம்பியனாகும். இந்த நிலையில் தான் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று டிராபியை வெல்வோம் என்று ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் கூறியுள்ளார்.
KKR vs SRH IPL Final
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: கடந்த 3 சீசன்களில் பிளே ஆஃப் சுற்றுகளில் விளையாடவில்லை. இந்த சீசனில் நாங்கள் விளையாடியதைப் பார்க்கும் போது இறுதிப் போட்டிக்கு வருவோம் என்ற உணர்வு இருந்தது. இது ஒரு வித்தியாசமான உணர்வு. டீமில் உள்ள அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள். ஐபிஎல் 2024 டிராபியை வெல்வது சிறப்பு வாய்ந்தது. தற்போது இறுதிப் போட்டிக்கு வந்து நிற்பதால், நாங்கள் நிச்சயமாக டிராபியை வெல்வோம் வென்று கூறியுள்ளார்.
KKR vs SRH, IPL Final 2024
இந்த சீசனில் 15 போட்டிகளில் விளையாடி 55 ஓவர்கள் வீசி, 2 மெய்டன் உள்பட 508 ரன்கள் கொடுத்து 11 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். ஆனால், தமிழக வீரர் நடராஜன் 13 போட்டிகளில் விளையாடி 49.2 ஓவர்கள் வீசி 436 ரன்கள் கொடுத்து 19 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். ஆனால், கேகேஆர் வீரர் வருண் சக்கரவர்த்தி 20 விக்கெட்டுகள் கைப்பற்றி பர்பிள் கேப் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்.
Bhuvneshwar Kumar
இந்த போட்டியில் நடராஜன் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றினால், பர்பிள் கேப் வென்று ரூ.15 லட்சமோ அல்லது அதற்கு அதிகமாகவே பரிசுத் தொகை வெல்வார். அப்படியில்லை என்றால் வருண் சக்கரவர்த்தி அதிக விக்கெட்டுகள் கைப்பற்றினால் பர்பிள் கேப் வென்றவருக்கான பரிசுத் தொகையை வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.