வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவை திடீர் ரத்து.! எப்போ.? என்ன காரணம் தெரியுமா.?
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவிற்கு சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால் இந்த ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
வேளாங்கண்ணி திருவிழா
உலக புகழ்பெற்ற வழிபாட்டு தலமாகவும், கீழ்திசை நாடுகளின் லூர்து நகரமாகவும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8ம் தேதி அன்னை பிறப்பு விழாவுடன் நிறைவுபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி செப்டம்பர் மாதம் 7ம் தேதி நடைபெறும். இதன்படி இந்த ஆண்டு பெருவிழா நேற்று (29ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தந்துள்ளனர்.
வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்
இதனையடுத்து பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்தும், சிறப்பு ரயிலங்களும் இயக்கப்படுகிறது. அந்த வகையில் மும்பை, பீகார் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் தென் மாவட்டங்களில் இருந்தும் ரயில்க்ள இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் ஏராளமான மக்கள் முன்பதிவு செய்து பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வேளாங்கண்ணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை டூ வேளாங்கண்ணி
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில் எண் 06037 சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில் வேளாங்கண்ணிக்கு 01.09.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 23.50 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கோலாகலமாக தொடக்கம்
மக்கள் ஆதரவு குறைவு
இதேபோல், 02.09.2024 அன்று இரவு 7.10 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் எண் 06038 வேளாங்கண்ணி - சென்னை எழும்பூர் விரைவு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.