Special Train: காரைக்குடிக்கு சிறப்பு ரயில்.! எங்கிருந்து எங்கே.? முன்பதிவு எப்போது தொடக்கம்-வெளியான அறிவிப்பு
வெளியூர் செல்வதற்கு பயணிகள் பெரிதும் பயணிக்க விரும்புவது ரயில் பயணத்தையாகும், பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்காக ரயில்களில் அதிகளவு பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். இதன் காரணமாகவே பெரும்பாலான ரயில்கள் நிரம்பி வழிகிறது. இதனை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு இயக்கப்படுகிறது. அந்தவகையில் தற்போது நெல்லை, காரைக்குடி, நாகர்கோவில் போன்ற ஊர்களுக்கு ரயில் இயக்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரயில்களில் கூட்ட நெரிசல்- சிறப்பு ரயில்
ரயில்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அந்த வகையில் வகையில் மைசூரில் இருந்து காரைக்குடிக்கும் காரைக்குடியில் இருந்து மைசூருக்கும் சிறப்பு ரயிலானது இயக்கப்பட உள்ளது மைசூரிலிருந்து (ரயில் எண் 06295) ஆகஸ்ட் 14 மற்றும் 17ஆம் தேதிகளில் ரயிலானது இரவு 9:30 மணி அளவில் புறப்படுகிறது, காரைக்குடிக்கு அடுத்த நாள் மதியம் 12 மணி 45 நிமிடங்களுக்கு வந்து சேருகிறது.
காரைக்குடிக்கு சிறப்பு ரயில்
இதேபோன்று மறு மார்க்கத்தில் காரைக்குடியில் இருந்து மைசூருவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு(ரயில் எண் 06296) ரயிலானது ஆகஸ்ட் 15 மற்றும் 18ம் தேதிகளில் இயக்கப்படுகிறது. காரைக்குடியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ரயிலானது அடுத்த நாள் காலை 9 10 மணியளவில் மைசூர் சென்றடைகிறது.
மழை வெளுத்து வாங்கப்போகுது.. 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் - மக்களே கவனம் தேவை!
தாம்பரம் டூ நெல்லை
இதே போல நெல்லை மற்றும் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயிலுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. சுதந்ந்திர தினத்தையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க திருநெல்வேலியில்( ரயில் எண் 06020) இருந்து நாளை மறுதினம் ஆகஸ்ட் 13 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இரவு 10.50 மணிக்கு செங்கல் பட்டு வரை இயக்கப்படுகிறது. மறு மார்க்கத்தில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயில் எண் (06019)இருந்து வருகின்ற 14, 19 ஆகிய தேதிகளில் மாலை 5.55 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்
மேலும் நாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து வருகின்ற 18, 25 தேதிகளில் இரவு 11.15 மணிக்கு ரயில் புறப்படும். மறு மார்க்கத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து 19, 26 ஆகிய தேதிகளில் பகல் 3.30 மணிக்கு சிறப்பு ரயி்ல்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்களுக்கா முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.