வனிதா வீட்டில் விஷேஷ பூஜை.. குடும்பத்தோடு ஒன்று சேர நடத்தினாரா? நேரில் வந்து பிராத்தித்த நட்சத்திர தோழிகள்!
பிரபல நடிகர் விஜயகுமாரின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் திரை துறையில் புகழ்பெற்றவர்களாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சந்திரலேகா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்தான் வனிதா விஜயகுமார்.
Vanitha House poojai
வனிதா விஜயகுமார் ஆரம்ப காலகட்டத்தில் தளபதி விஜய் மற்றும் பல முன்னணிகளுடன் நடித்தவர். தனது குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்து வந்த இவர், ஒரு கட்டத்தில் தனது மொத்த குடும்பத்தையும் பிரிந்து தனிமையில் வாழ துவங்கினர்.
விஜயகுமார் குடும்பத்தில் இருந்து இன்னொரு ஹீரோயினா! சினிமாவுக்கு ரெடியாகும் வனிதா மகள் ஜோவிகா!
Actress Vanitha Vijayakumar
குடும்பத்திலிருந்து பிரிந்து வந்தாலும் தன் தாய் தந்தை மீது அதிக பாசத்துடன் இருந்து வந்த வனிதா விஜயகுமார். தன் தாய் இறப்பதற்கு முன்னால் தன்னிடம் பேசிய பல நிகழ்வுகளை குறித்து கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக பகிர்ந்து கொண்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே.
Actress Riythvika
இந்நிலையில் தனது தந்தை மீது அதிக பாசம் கொண்டுள்ள நடிகை வனிதா விஜயகுமாரின் வீட்டில் குபேர பூஜை தற்பொழுது நடந்துள்ளது. இதில் பிரபல நடிகைகள் ரித்விகா, ஷகிலா மற்றும் வேறு சில நடிகைகளும் கலந்துகொண்டனர். குபேர பகவானை வணங்கி ஐஸ்வர்யம் பெருக பூஜையை நடத்திய வனிதா விஜயகுமார், மீண்டும் தன் குடும்பத்துடன் இணைய ஆவலாக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
Gubera poojai
அதேபோல வனிதா விஜயகுமாரின் மூத்த மகள் ஜோவிகாவும் தற்பொழுது நடிகையாக மும்பரம் காட்டி விடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அடிக்கடி தான் எடுக்கும் அசத்தலான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.