Special Bus : வீக் எண்டு லீவுக்கு வெளியூர் போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து தெரியுமா.?
வார விடுமுறை இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுகிழமையையடுத்து சிறப்பு பேருந்தை இயக்கப்படவுள்ளது. சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
koyambedu
சிறப்பு பேருந்து அறிவிப்பு
தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சார்பாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. வார விடுமுறை நாட்களையொட்டி கூடுதல் பயணிகள் வெளியூருக்கு பயணிப்பார்கள் என்ற காரணத்தால் வாரந்தோறும் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வாரம் எந்த, எந்த இடங்களில் இருந்து எந்த ஊருக்கு எத்தனை பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என்பது தொடர்பாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
corona crowed in koyambedu bus stand
வார விடுமுறை சிறப்பு பேருந்து
அந்த அறிவிப்பில் நாளை 09/08/2024 (வெள்ளிக்கிழமை) 10/08/2024 (சனிக்கிழமை) 11/08/2024 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம். கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 09/08/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 275 பேருந்துகளும், 10/08/2024 (சனிக்கிழமை) 315 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது..
kilambakkam
எத்தனை சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மேலும் சென்னை கோயம்பேட்டிலிருந்து ஓசூர். பெங்களூரு, திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி. ஆகிய இடங்களுக்கு 08/08/2024 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 09/08/2024 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரே நாளில் இத்தனை பேர் முன்பதிவா.?
மாதாவரத்திலிருந்து 09/08/2024 அன்று 20 பேருந்துகளும் 10/08/2024 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 8,739 பயணிகளும் சனிக்கிழமை 3,414 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 8,107 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
Kilambakkam
முன் பதிவு செய்து பயணியுங்கள்
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.