வார விடுமுறை, சுபமூகூர்த்தம் சிறப்பு பேருந்து அறிவிப்பு.! எங்கிருந்து இயக்கப்படுகிறது தெரியுமா.?
வார விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த தினங்களை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. சென்னை, கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முன்பதிவு செய்து பயணிக்குமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வார விடுமுறை சிறப்பு பேருந்து
வார விடுமுறை நாட்களையொட்டி சுபமுகூர்த்தம் தினமும் வருவதால் ஏராளமான மக்கள் வெளியூருக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில்,
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருவண்ணாமலை. திருச்சி, கும்பகோணம், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 30/08/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 355 பேருந்துகளும், 31/08/2024 (சனிக்கிழமை) 360 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்து
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 30/08/2024 வெள்ளிக் கிழமை அன்று 75 பேருந்துகளும் 31/08/2024 சனிக்கிழமை அன்று 75 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இத்தனை இடங்களில் இன்று மின் தடையா.? உங்க ஏரியா இருக்கா.? இதோ லிஸ்ட்
மாதவரத்தில் இருந்து சிறப்பு பேருந்து
மாதாவரத்திலிருந்து 30/08/2024 அன்று 20 பேருந்துகளும் 31/08/2024 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 7,950 பயணிகளும், சனிக்கிழமை 3,663 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 6,840 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
முன்பதிவு செய்ய அறிவுறுத்தல்
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்குமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.