ரஜினி முதல் ஆர்யா வரை - பெரிய Age Gapல் திருமணம் செய்துகொண்ட செலிபிரிட்டிஸ்!
Celebrity Couple : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் ஆர்யா வரை பல பெரிய நட்சத்திரங்கள் பெரிய அளவிலான வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துள்ளனர்.

chiranjeevi
சிரஞ்சீவி & சுரேக்கா
தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி, கடந்த 1980ம் ஆண்டு சுரேகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 44 ஆண்டுகளுக்கும் மேலாக மகிழ்ச்சியோடு வாழ்ந்து வரும் சிரஞ்சீவி தன்னைவிட 6 வயது சிறியவரான சுரேகாவை திருமணம் செய்துள்ளார்.
200 கிலோ தங்க நகைகளை அணிந்து நடித்த ஐஸ்வர்யா ராய்! டிசைன் செய்தவர்கள் யார் தெரியுமா?
Mammootty
மம்மூட்டி & சல்பத் குட்டி
மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி, கடந்த 1951ம் ஆண்டு பிறந்தவர். இவர் தன்னைவிட 10 வயது இளைய பெண்ணான சல்பத் குட்டி என்பவரை கடந்த 1979ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு துல்கர் சல்மான் மட்டும் சுருமினி என்கின்ற இரண்டு மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Rajinikanth
ரஜினிகாந்த் & லதா ரஜினிகாந்த்
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த், லதா ரங்காச்சாரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கடந்த 1981ம் ஆண்டு நடந்தது, ரஜினிகாந்த் தனது மனைவியை விட 8 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Arya
ஆர்யா & சாயிஷா
தமிழ் திரை உலகில் நல்ல பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் நடிகர் ஆர்யா, கடந்த 2019ம் ஆண்டு பிரபல நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். ஆர்யாவிற்கும் அவரது மனைவி சயிஷாவிற்கு 17 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.
shalini
அஜித் & ஷாலினி
தமிழ் திரை உலகின் மிகச்சிறந்த செலிபிரிட்டி ஜோடி என்றால் அது அஜித் மற்றும் ஷாலினி தான். தீவிரமாக காதல் செய்து கடந்த 2000வது ஆண்டு திருமணம் செய்து கொண்ட அஜித் மற்றும் ஷாலினி ஜோடி, 8 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துகொண்டனர்.
ஒரே படம்.. அதிக கதாபாத்திரம் ஏற்று நடித்த தென்னிந்திய நடிகர் யார்? கமல் இல்ல!