MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • விவாகரத்து செய்த நடிகர்.. குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்ததாக சர்ச்சை.. இந்த டாப் நடிகை யாருன்னு தெரியுதா?

விவாகரத்து செய்த நடிகர்.. குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்ததாக சர்ச்சை.. இந்த டாப் நடிகை யாருன்னு தெரியுதா?

முதல் காதல் பிரேக் அப், விவாகரத்தில் முடிந்த திருமணம் என பல சர்ச்சைகளில் சிக்கிய நடிகை சமந்தாவின் குழந்தை பருவ போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Ramya s
| Updated : Aug 07 2024, 10:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. கடந்த 2010-ம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர் தொடர்ந்து பாணா காத்தாடி, நான் ஈ, அஞ்சான், கத்தி, தங்க மகன், 24, தெறி, இரும்புத்திரை என பல ஹிட் படங்களில் நடித்தார்.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
211

திரை வாழ்க்கையில் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கினார் சமந்தா. முதலில் நடிகர் சித்தார்த்தும், சமந்தாவும் காதலித்து வந்த நிலையில் பின்னர் இந்த ஜோடி பிரேக் அப் செய்து கொண்டனர்.

311

தன்னுடன் நடித்த சக நடிகரான நாக சைதன்யாவை காதலித்து வந்த சமந்தா அவரை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் 4 ஆண்டுகளில் தோல்வியில் முடிந்தது. 2021-ம் ஆண்டு சமந்தா – நாக சைதன்யா இருவரும் தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனால் பல விமர்சனங்களை எதிர்கொண்டார் சமந்தா. 

411

சமந்தா வேறொரு பிரபலத்துடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர் நாக சைதன்யாவுடன் குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்ததாகவும் கூட வதந்திகள் காட்டுத்தீ போல பரவியது.

511

எனினும் சர்ச்சைகளையும் வதந்திகளையும் பொருட்படுத்தாமல் வெப் சீரிஸ், படங்கள் என படு பிசியாக வலம் வந்தார் சமந்தா.

611

இவர் கைவசம் தற்போது சிட்டாடல் என்ற வெப் சீரீஸ் மட்டுமே உள்ளது. இந்த சீரிஸ் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

711

இதனிடையே மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதற்காக நடிப்புக்கு இடைவெளி கொடுத்து ஓய்வெடுத்து வந்தார்.

811

இந்த சூழலில் மீண்டும் சமந்தா நடிப்பதில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இயக்குனர் அட்லீ அல்லு அர்ஜூனை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ஹீரோயினாக சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

911

தென்னிந்தியாவின் பணக்கார நடிகைகளில் நடிகை சமந்தாவும் ஒருவர். சமந்தா ஒரு படத்திற்கு ரூ 3 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு ரூ.90 கோடி என்று கூறப்படுகிறது. அவரிடம் பல விலை உயர்ந்த சொகுசு ஆடம்பர கார்களும் உள்ளன.

 

1011

இன்று பான் இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவின் குழந்தை பருவ போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

1111

சிறு வயதிலேயே படு க்யூட்டாக இருக்கும் சமந்தாவின் போட்டோவுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
சமந்தா ரூத் பிரபு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved