ஒரு பயலும் வாங்கல... ஓடிடியில் போனி ஆகாத தோனி படம் - எல்.ஜி.எம்-ஐ விற்க முடியாமல் தவிக்கும் தல...!
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் எம்.எஸ்.தோனி தயாரித்த முதல் தமிழ் படமான எல்.ஜி.எம்-ஐ எந்த ஓடிடி தளங்களும் வாங்க முன்வரவில்லை என கூறப்படுகிறது.
Dhoni
கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் தோனி. இந்திய அணியின் கேப்டனாக இவர் படைத்த சாதனைகள் ஏராளம். உலகமே வியந்து பாராட்டும் சிறந்த கேப்டனாக திகழ்ந்த தோனி, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஐபிஎல்லில் மட்டும் விளையாடி வருகிறார். இவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் தற்போது நடப்பு சாம்பியனாகவும் உள்ளது. தோனிக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
LGM movie
தோனியும் சென்னை மீது தனி அன்பு வைத்திருக்கிறார். சென்னை தான் தன் இரண்டாவது தாய் வீடு என்று பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். தமிழ்நாட்டு ரசிகர்களை ஒரு கிரிக்கெட் வீரராக சந்தோஷப்படுத்தி வந்த தோனி, அண்மையில் தோனி எண்டர்டெயின்மெண்ட் என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி, அதில் தமிழ் படம் ஒன்றை தயாரித்து ஒரு தயாரிப்பாளராகவும் மக்கள் மனதில் இடம்பெற நினைத்தார்.
Dhoni, sakshi
அந்த வகையில் அவர் தயாரித்த முதல் திரைப்படம் லெட்ஸ் கெட் மேரீடு (எல்.ஜி.எம்). ஹரீஷ் கல்யாண் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக இவானாவும் நடித்திருந்த இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி இருந்தார். இதில் யோகிபாபு, நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் ஆடியோ லாஞ்சில் தோனியே கலந்துகொண்டதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இதையும் படியுங்கள்... ரஜினி ஒரு சித்தர்... அவருக்கு எதுக்கு அரசியல் - ஜெயிலர் பட 25-வது நாள் விழாவில் ‘சித்தப்பு’ சரவணன் பேச்சு
Lets get Married
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி திரைக்கு வந்த எல்.ஜி.எம் திரைப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது. திரைக்கதை சுத்தமாக எடுபடாததால், முதல் நாளே நெகடிவ் விமர்சனங்களை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பலத்த அடி வாங்கி படுதோல்வி அடைந்தது. இதனால் தயாரிப்பாளராக தோனிக்கு முதல் படமே பெரும் சறுக்கலை கொடுத்தது.
lgm movie OTT
சரி தியேட்டரில் சொதப்பிய இப்படத்தை ஓடிடி-க்கு விற்று போட்ட காசையாவது எடுத்துவிடலாம் என பார்த்த தோனிக்கு மாபெரும் அதிர்ச்சி காத்திருந்ததாம். அது என்னவென்றால் அவர்கள் கேட்ட தொகைக்கு படத்தை வாங்க எந்த ஓடிடி தளமும் முன் வரவில்லையாம். இதனால் அப்படத்தை விற்க முடியாமல் தவித்து வருகிறாராம் தோனி. இதனால் தான் இப்படம் ஒரு மாதத்தை கடந்தும் இன்னும் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படவில்லையாம். தற்போது விலையை குறைத்து பேசி படத்தை எப்படியாவது விற்றுவிடும் முடிவுக்கு தோனி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... கவர்ச்சி காத்துல கழண்டுவிழும் சேலையோடு... கிளாமர் தூக்கலா போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷின் கிக்கான போட்டோஸ் இதோ