- Home
- Gallery
- சமந்தாவுடனான விவாகரத்துக்கு பின் நடிகையுடன் மலர்ந்த காதல்... 2வது திருமண அறிவிப்பை வெளியிடும் நாக சைதன்யா?
சமந்தாவுடனான விவாகரத்துக்கு பின் நடிகையுடன் மலர்ந்த காதல்... 2வது திருமண அறிவிப்பை வெளியிடும் நாக சைதன்யா?
நடிகை சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்த நாக சைதன்யா, தற்போது இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி வருவதாக தகவல் கசிந்துள்ளது.

Naga Chaitanya
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. அவர் கடந்த 2017ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து கரம்பிடித்தார், சமந்தா உடனான திருமண வாழ்க்கை நான்கே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்தார் நாக சைதன்யா. விவாகரத்துக்கு பின்னர் இருவருமே சினிமாவில் பிசியாக நடித்து வருகின்றனர்.
samantha Naga chaitanya
குறிப்பாக சமந்தா பான் இந்தியா அளவில் பிசியான நாயகியாக கலக்கி வருகிறார். அதேபோல் நாக சைதன்யாவும் அமீர்கானின் லால் சத்தா படத்தின் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அப்படம் அட்டர் பிளாப் ஆனதால், பாலிவுட்டுக்கு டாட்டா காட்டிவிட்டு தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் தண்டல் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் நாக சைதன்யா ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.
இதையும் படியுங்கள்... Hansika Motwani : மின்னுவது உங்கள் உடையா.. இல்ல நீங்களா? ரசிகர்களை குழம்பவிடும் அழகில் ஹன்சிகா - கூல் பிக்ஸ்!
Sobitha naga chaitanya
இதனிடையே நாக சைதன்யா பற்றி காதல் கிசுகிசுக்களும் டோலிவுட்டில் உலா வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா காதலித்து வருவதாக பேச்சு அடிபட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் லண்டனில் ஜோடியாக டேட்டிங் சென்றபோது எடுத்த புகைப்படம் லீக் ஆகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.
Naga Chaitanya 2nd Marriage?
இதனிடையே அண்மையில் இருவரும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்கள் ஒரே எடுத்தது போல் இருந்ததால் அதை ஒப்பிட்ட ரசிகர்கள், இருவரும் ஒன்றாக அவுட்டிங் சென்றுள்ளதை கண்டுபிடித்தனர். இப்படி தங்களது ரகசிய காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வர துவங்கி உள்ளதால், நாக சைதன்யா - சோபிதா ஜோடி தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முடிவுக்கு வந்துள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இதையும் படியுங்கள்... Sunaina: காதல் நிலையை கடந்து விட்டேன்... என்கேஜ்மென்ட் ஆனதை புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்த சுனைனா!