ஹோம்லி லுக்கில்.. சிரிச்ச முகத்துடன் போஸ் கொடுக்கும் VJSயின் நாயகி சஞ்சிதா ஷெட்டி - கியூட் கிளிக்ஸ்!
Sanchita Shetty : கன்னட மொழி திரைப்படங்கள் மூலம் அறிமுகமாகி, இப்பொழுது அதிக அளவில் தமிழ் திரைப்படங்களில் நடித்து அசத்தி வரும் நாயகி தான் சஞ்சிதா ஷெட்டி, அவருக்கு வயது 35.
Sanchita shetty
கர்நாடகாவில் பிறந்த சஞ்சிதா செட்டி, கடந்த 2006ம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் தான் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். தமிழில் "தில்லாலங்கடி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார்.
நதியா முதல்... சாய் பல்லவி வரை... கவர்ச்சி காட்டாமல் திரையுலகில் திறமையால் ஜெயித்த 9 நடிகைகள்!
Sanchitha
கடந்த 2013ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான "சூது கவ்வும்" என்கின்ற திரைப்படம் சஞ்சிதா செட்டிக்கு மிகப்பெரிய வரவேற்பை தமிழ் மக்கள் மத்தியில் கொடுத்தது. அதன் பிறகு தான் இவருக்கு தமிழில் அதிக அளவில் வாய்ப்புகள் கிடைத்தது.
Actress Sanchita
தொடர்ச்சியாக பல தமிழ் திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் சஞ்சிதா ஷெட்டி, இறுதியாக கடந்த 2023ம் ஆண்டு வெளியான "அழகிய கண்ணே" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
Actress Sanchitha Shetty
தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளை தாண்டி, ஒரே ஒரு தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார் சஞ்சிதா ஷெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.