- Home
- Gallery
- வீட்டில் சௌந்தரபாண்டிக்கு குறையும் மரியாதை... கலங்கி நின்ற சூடாமணி - அண்ணா சீரியல் அப்டேட்
வீட்டில் சௌந்தரபாண்டிக்கு குறையும் மரியாதை... கலங்கி நின்ற சூடாமணி - அண்ணா சீரியல் அப்டேட்
முத்துப்பாண்டி கொடுத்த சம்பள காசில் இசக்கிக்கு பாக்கியம் தங்க செயின் வாங்கி கொடுத்த நிலையில் இன்று நடக்கப்போவதை பார்க்கலாம்.

Anna Serial
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னாவின் நிச்சயதார்த்த விஷயம் அறிந்த சௌந்தரபாண்டி வெங்கடேசனின் தாய் மாமாவை அழைத்து அவனை வைத்து கல்யாணத்தை நிறுத்த திட்டமிட்ட நிலையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, சம்பளம் வாங்கிய முத்துப்பாண்டி அதை கொண்டு வந்து பாக்கியத்திடம் கொடுக்க சௌந்தரபாண்டி எப்பவும் என்கிட்ட தானே கொடுப்ப என்று கோபப்படுகிறார். உடனே முத்துப்பாண்டி இந்த ஒரு முறை அம்மாகிட்ட கொடுக்கிறேன் போங்க என்று சொல்லிவிட சௌந்தரபாண்டி கடுப்பாகிறார்.
Zee Tamil Anna Serial
அதைத்தொடர்ந்து பரணி சண்முகத்திடம் ரத்னாவின் நிச்சயதார்த்தத்திற்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கணும் முக்கியமா தங்க நகைகளை வாங்கணும் என்று சொல்கிறாள். சண்முகம் லிஸ்ட் போடு வாங்கிக்கலாம் என்று சொல்ல இதை கேட்ட சூடாமணி வைகுண்டத்தை கூப்பிட்டு பாக்கியத்தை வச்சு தான் மாப்பிள்ளைக்கு செயின் எடுக்கணும் அதுதான் முறை என்று சொல்கிறாள்.
அதன் பிறகு பாக்கியத்துக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல பாக்கியம் நானே இதை பத்தி பேசணும்னு இருந்தேன். நான் வந்துடுறேன் என்று சொல்கிறாள். இசக்கி நானும் வரேன் என்று சொல்ல பாக்கியம் வேண்டாம் என்று சொல்லி விடுகிறாள். உடனே சௌந்தரபாண்டி நானும் வரேன் என்று சொல்ல பாக்கியம் யாரும் வேண்டாம் நான் மட்டும் போயிட்டு வருகிறேன் என்று தனியாக கிளம்பி வருகிறாள்.
இதையும் படியுங்கள்... மைக்கை ஆஃப் பண்ணிவிட்டு வெளிய வா... காமெடி நடிகர் யோகிபாபுவின் கறார் பேச்சுக்கு வழுக்கும் எதிர்ப்பு
Anna Serial Update
மறுபக்கம் சூடாமணி 20 வருஷமாக ஜெயிலில் கஷ்டப்பட்டு வேலை செய்து சம்பாதித்த பணத்தை மொத்தமாக எடுத்துக் கொடுத்து நகை வாங்க சொல்லி கொடுக்கிறாள். சூடாமணியின் கஷ்டத்தையும் மகள் மீது வைத்திருக்கும் பாசத்தையும் பார்த்து எல்லோரும் கண் கலங்குகின்றனர். அடுத்ததாக நகை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்ததும் பரணி பெரியவங்க காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு அந்த செயினை கழுத்தில் போட்டு பார்க்க சொல்ல ரத்னா சூடாமணி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க சூடாமணி சந்தோஷத்தில் கண் கலங்குகிறாள்.
அடுத்து பாக்கியம் முத்துப்பாண்டி கொடுத்த சம்பள காசில் இசக்கிக்கு ஒரு தங்க செயின் வாங்கி வந்து கொடுக்க இசக்கி அவர் வாங்கிக் கொடுக்கலையே என்று வருத்தப்பட இது அவனோட சம்பளப் பணத்தில் வாங்குனது தான் என்று சொல்ல அவர் கையால் கொடுத்தால் நல்லா இருக்கும் என்று ஏங்குகிறாள்.
Anna Serial Today Episode
இதனால் பாக்கியம் அதை ஒரு மிளகாய்த்தூள் டப்பாவில் போட்டு முத்துப்பாண்டியிடம் கொடுத்து இதை இசக்கி கிட்ட கொடுத்துடு என்று சொல்கிறாள். முத்துப்பாண்டி அதை வாங்கி வந்து இசக்கியிடம் இந்தா என்று கொடுத்து விட்டு செல்ல, அதை திறந்து பார்க்க அதில் தங்க செயின் இருப்பதை பார்த்து இசக்கி சந்தோஷப்படுகிறாள். இசக்கியின் சந்தோஷத்தை பார்த்து பாக்கியமும் மகிழ்ச்சி அடைகிறாள். அடுத்து நடக்கப் போவதை அறிய அண்ணா சீரியலை இரவு 8.30 மணிக்கு மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... அட்வான்ஸ் வாங்கிட்டு டிமிக்கி கொடுக்கும் தனுஷ்! தயாரிப்பாளர் சங்கத்தின் புதுவிதியால் ‘அடங்காத அசுரனுக்கு’ செக்