- Home
- Gallery
- கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆச்சாம்... கணவரோடு ஹனிமூன் ட்ரிப் சென்று கொண்டாடிய நடிகை சோனாக்ஷி சின்ஹா
கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆச்சாம்... கணவரோடு ஹனிமூன் ட்ரிப் சென்று கொண்டாடிய நடிகை சோனாக்ஷி சின்ஹா
திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்ததை நடிகை சோனாக்ஷி சின்ஹா ஹனிமூன் ட்ரிப் சென்று கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

sonakshi sinha
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சத்ருஹன் சின்ஹா. அவரது மகளான சோனாக்ஷி சின்ஹாவும் பாலிவுட் திரையுலகில் ஹீரோயினாக கலக்கி வருகிறார். இவர் தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக லிங்கா திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர், ஜாகீர் இக்பால் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த ஜோடிக்கு கடந்த மாதம் 23-ந் தேதி திருமணம் நடந்து முடிந்தது.
sonakshi sinha husband
சோனாக்ஷி - ஜாகீர் இக்பால் ஜோடியின் திருமணத்தில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்த கையோடு தன்னுடைய காதல் மனைவி சோனாக்ஷிக்கு பிஎம்டபிள்யூ ஐ7 என்கிற எலக்ட்ரிக் காரை பரிசாக வழங்கினார் ஜாகீர் இக்பால். அந்த காரின் விலை ரூ.2 கோடி. திருமணம் முடிந்த பின்னர் தன்னுடைய காதல் கணவருடன் ஹனிமூன் சென்றிருக்கிறார் சோனாக்ஷி.
இதையும் படியுங்கள்... Ajith : ஷாலினியோடு ரொமாண்டிக் ரைடு செல்ல அஜித் வாங்கிய காஸ்ட்லியான ஃபெராரி கார்... அதன் விலை இத்தனை கோடியா?
sonakshi sinha honeymoon trip
அந்த வகையில் திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்துள்ளதை கொண்டாடும் விதமாக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு ஹனிமூன் ட்ரிப் சென்றிருக்கிறார் சோனாக்ஷி. அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியபோதும், நீச்சல் குளத்தில் உற்சாக குளியல் போட்ட போதும் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை சோனாக்ஷி சின்ஹா.
sonakshi sinha photos
பிலிப்பைன்ஸில் இருந்த ஒரு வாரம், சரியான நேரத்தில் சாப்பிட்டு தூக்கி, உடல்நலத்தை கவனித்துக்கொண்டது ஒரு லைஃப் சேஞ்சிங் அனுபவமாக இருந்தது என சோனாக்ஷி குறிப்பிட்டுள்ளார். அவரின் ஹனிமூன் ட்ரிப் போட்டோஸ் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு, அவர் பதிவிட்ட புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகளையும் அள்ளிக்குவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Vijay Built new theatre : புதிதாக தியேட்டர் கட்டும் தளபதி விஜய்... அதுவும் எந்த ஊர்ல தெரியுமா?