தனியார் ஆம்னி பேருந்துகளை அலறவிடும் அரசு பேருந்து! இவ்வளவு வசதிகள் இருக்கா? வாய் பிளக்கும் பொதுமக்கள்!
Tamilnadu Government New Buses: தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 90.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 150 புதிய BS-VI பேருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் பயணிகளுக்கு மேம்பட்ட வசதிகளை வழங்குவதோடு, சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
Udhayanidhi Stalin
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, இன்று சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழக, மத்திய பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 90.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் BS VI 150 புதிய பேருந்துகளின் இயக்கத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
Government Bus
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட BS-VI 200 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 150 BS-VI புதிய பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டது. புதிய பேருந்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக பயணிக்கும் வகையில் கீழ்கண்ட சிறப்பு அம்சங்கள் உள்ளது.
இதையும் படிங்க: Southern Railway: திருப்பதி போற பிளான் இருக்கா! அப்படினா தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பை பாருங்க!
Government Bus
BS-VI புதிய பேருந்தில் பயணிகளுக்கான முக்கிய அம்சங்கள்:
இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பயணிகளின் சொகுசு பயணத்திற்காக முன்புற Air Suspension வசதி செய்யப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளின் வசதிக்காக 50 பேருந்துகளில் கீழ் படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளன. படுக்கை இரண்டிற்கும் இடையே அதிகரித்த இடம் மற்றும் தடுப்பு வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது.
Government Bus
ஒவ்வொரு இருக்கை மற்றும் படுக்கைக்கும் தனித்தனியாக தனிப்பட்ட சார்ஜிங் போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படுக்கைக்கும் தனித்தனியாக பயணிகள் வசதிக்காக தனித்தனி மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்காக ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அபாய ஒலி எழுப்பி அமைக்கப்பட்டுள்ளது. நடத்துனரால் பயணிகளுக்கு தகவல் அறிவிப்புகளுக்கான ஒலி பெருக்கி (Micro Phone)அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக டிஜிட்டல் கடிகராம் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் சுமை பெட்டி மற்றும் சரக்கு பார்சலுக்காகவும் போதிய இட வசதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Tamilnadu Government Bus
BS VI புதிய பேருந்துகளின் முக்கிய அம்சங்கள்:
அரசாங்க விதிமுறைகளின் படி காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் BS-VI புதிய பேருந்துகளின் இஞ்சின் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங் செயல் திறனுக்காக எலக்ட்ரானிக் மேக்னடிக் ரேடர் நிறுவப்பட்டுள்ளது. இன்ஜின் தீயை முன் கூட்டியே திறம்பட அனுமானித்து, தீ கட்டுபட்டு அடக்கும் அமைப்பு கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.