- Home
- Gallery
- குடிப்பழக்கம் இல்லாத மற்றும் குடியில் இருந்து மீண்ட 6 முன்னணி பிரபலங்கள்! யார் யார் தெரியுமா!
குடிப்பழக்கம் இல்லாத மற்றும் குடியில் இருந்து மீண்ட 6 முன்னணி பிரபலங்கள்! யார் யார் தெரியுமா!
சினிமா என்பது ஆடம்பரம் நிறைந்த மாய உலகமாக பார்க்கப்படும் நிலையில், பல பிரபலங்கள் தங்களின் அந்தஸ்தை வெளிப்படுத்த அவ்வபோது பாட்டிகளில் கலந்துகொண்டு மது போதைக்கு அடிமை ஆவது வழக்கம். ஆனால் உச்ச நடிகராக இருந்த போதிலும், மதுப்பழக்கம் இல்லாத மற்றும் மதுவை ஒரு கட்டத்திற்கு மேல் விட்டு விட்ட 6 முன்னணி நடிகர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்:
தமிழ் சினிவின் சிம்ம சொப்பனமாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், திரையுலகில் அறிமுகமான காலத்தில் புகை மற்றும் மதுவுக்கு அடிமையாகாமல் இருந்தாலும், உச்ச நட்சத்திரமாக வளர்ந்த போது அதிகப்படியான புகை பழக்கத்திற்கும், மது பழக்கத்திற்கும் அடிமையாக மாறினார். இதனை பல பிரபலங்கள் தங்களின் பேட்டிகளில் கூட கூறியுள்ளனர். ஒரு கட்டத்தில் சிறுநீரகப் பிரச்சினை மற்றும் மேலும் சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டபோது, அவரின் மனைவி லதா எடுத்த முயற்சியின் காரணமாகவும், குடும்பத்திற்காகவும் ஒரேடியாக புகைப்பழக்கம் மற்றும் குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டார். இவர் இந்த பழக்கத்தை விட்டு, சுமார் 10 மற்றும் 15 வருடங்களுக்கு மேல் ஆவது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஸ்ருதிஹாசன்:
உலக நாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில்... மன உளைச்சல் காரணமாக ஒரு கட்டத்தில் மிகுந்த குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாகவும், எந்நேரமும் பார்ட்டி மற்றும் சரக்குக்கு என அவற்றிற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்த நிலையில், அதுவே தன்னை அடிமைப்படுத்திய போது, அதில் இருந்து விலக வேண்டும் என முடிவு செய்து ஒட்டுமொத்தமாக குடிப்பழக்கத்தை விட்டு வெளியேறியதாக தெரிவித்திருந்தார்.
'சர்தார் 2' படப்பிடிப்பில் உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் ஏழுமலை உடலுக்கு நடிகர் கார்த்தி அஞ்சலி!
Venkatesh Daggubati
வெங்கடேஷ் டகுபதி:
தெலுங்கு திரை உலகில் முன்னடி நடிகராக இருக்கும் வெங்கடேஷ் ரகுபதி, தன்னுடைய 63 வயதிலும், இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் ஃபிட்னஸோடு இருக்க காரணம், இவரின் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களும், மது - புகை போன்ற பழக்கங்களுக்கு எந்த நிலையிலும் அடிமையாகாமல் இருப்பதும் தான்.
சூர்யா:
அதேபோல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும், சூர்யாவும் அவரின் பர்சனல் வாழ்க்கையிலும் சரி, தொழில் ரீதியான சினிமா வாழ்க்கையிலும் சரி மிஸ்டர் கிளீன் என பெயர் எடுத்தவர். இவர் ஆரம்ப காலத்தில் இருந்தே, தன்னுடைய தந்தை பெயருக்கு கலக்கம் ஏற்படுத்த கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளவர் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன்:
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து, மிக குறுகிய காலத்தில் விஜய், சூர்யா, அஜித், ஆகியோருக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு உயர்ந்துள்ள சிவகார்த்திகேயனும்... சினிமாவில் அறிமுகமாகி தன்னை தேடி, புகழும், பாராட்டுக்களும் வந்த போது கூட... எந்த ஒரு தேவையில்லாத பழக்கங்களுக்கு அடிமையாமால் உள்ளவர்.
பிரபு கணேசன்:
80-களில் ஹீரோவாக அறிமுகமாகி, தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வரும் சிவாஜி கணேசனின் மகன் பிரபு... சாப்பாட்டு விஷயத்தில் படு தாராளமானவர் என்றாலும், ஒரு போதும் குடி, புகை போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகாதவர்.