5 வருட காத்திருப்பு... அயலான் படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்தது ஏன்? மனம்திறந்த சிவகார்த்திகேயன்
அயலான் படத்தில் தான் சம்பளமே வாங்காமல் நடித்துள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் கூறியது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
Ayalaan
இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் அயலான். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை 24 ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பில் ராஜா தயாரித்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் பல்வேறு பிரச்சனைகளை கடந்து ஒருவழியாக ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு அயலான் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
Sivakarthikeyan Ayalaan
இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் தான் இப்படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்தது பற்றி பேசி உள்ளார் சிவகார்த்திகேயன். அவர் கூறியதாவது : “அயலான் படம் நிதி பிரச்சனையில் சிக்கியதன் காரணமாக பாதியில் நின்றபோது நான் எனக்கு சம்பளம் வேண்டாம் என சொல்லிவிட்டேன். அதற்கு காரணம் ரவிக்குமார் தான். பணத்தை இழந்ததாக நான் நினைக்கவில்லை. இப்படத்தில் நான் ரவிக்குமாரை சம்பாதித்து இருக்கிறேன். அவர் தான் எனக்கு இந்த படத்துல பெரிய சொத்து.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Ayalaan movie team
அயலான் எப்போ வரும்னு ரவிக்குமாரின் மனைவி என்னிடம் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பார். அவருக்கு நான் இப்போ சொல்றேன். நீங்க உங்களோட 2-வது குழந்தையை ரிலீஸ் பண்ணும் முன் இந்த அயலான் ரிலீஸ் ஆகிவிடும் எனக்கூறி தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார் சிவகார்த்திகேயன். அதேபோல் ஏ.ஆர்.ரகுமான் பற்றி பேசுகையில், இப்படத்திற்காக 5 ஆண்டுகளுக்கு முன் கமிட் ஆனபோது என்ன சம்பளம் வாங்கினாரோ அதே சம்பளம் போதும் என ஏ.ஆர்.ரகுமான் சொல்லிவிட்டதாக சிவகார்த்திகேயன் கூறினார்.
Ayalaan AR Rahman
மேலும் அயலானுக்கு டியூன் போட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், தற்போது புதிதாக வேறு டியூன் போட்டு தருவதாக கூறி அவரும் இந்த படத்திற்காக சிறந்த பங்காற்றி வருவதாக சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி உடன் கூறி இருக்கிறார். இந்தியாவிலேயே இதுமாதிரி படம் வந்ததே இல்லை என்றும் இது தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தும் படமாக நிச்சயம் இருக்கும் என்றும் சிவகார்த்திகேயன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...என் பொண்ணு ஹீரோயின் ஆகிட்டா... அதுக்குள்ள ஜோவிகாவுக்கு இத்தனை பட வாய்ப்புகளா? லிஸ்ட் போட்டு சொன்ன வனிதா