- Home
- Gallery
- சிவகார்த்திகேயனும் அட்லீ மனைவி பிரியாவும் ஒன்னா நடிச்சிருக்காங்களா? என்ன படம்? வைரல் வீடியோ..
சிவகார்த்திகேயனும் அட்லீ மனைவி பிரியாவும் ஒன்னா நடிச்சிருக்காங்களா? என்ன படம்? வைரல் வீடியோ..
சிவகார்த்திகேயன், இயக்குனர் அட்லீயின் மனைவி பிரியா இருவரும் இணைந்து நடித்த குறும்படத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sivakarthikeyan
சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி உள்ளார். நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டராக சிவகார்த்திகேயன் வலம் வருகிறார்.
Actor Sivakarthikeyan
சிவகார்த்திகேயன் ஹீரொவாக அறிமுகமான மெரினா படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார் சிவகார்த்திகேயன்.
Sivakarthikeyan
சீமராஜா, மிஸ்டர் லோக்கல், ஹீரோ போன்ற ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் வெற்றிகரமாக ஓடியதால் வெற்றி நடிகராகவே சிவகார்த்திகேயன் பார்க்கப்படுகிறார்.
Sivakarthikeyan
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாவீரன், அயலான் ஆகிய படங்களும் ஹிட் படங்களாகவே அமைந்தன. தற்போது அமரன் என்ற பயோபிக் படத்தில் நடித்து வரும் அவர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வரும் எஸ் 23 படத்திலும் நடித்து வருகிறார்.
Sivakarthikeyan
கடந்த 2010-ம் ஆண்டு ஆர்த்தி என்ற பெண்ணை சிவகார்த்திகேயன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ் என்ற மகனும் இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தான் 3-வதாக மகன் பிறந்தார்.
Actor Sivakarthikeyan
இந்த நிலையில் சிவகார்த்திகேயன், இயக்குனர் அட்லீயின் மனைவி பிரியா இருவரும் இணைந்து நடித்த குறும்படத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sivakarthikeyan
360 டிகிரி என்ற குறும்படத்தில் சிவகார்த்திகேயன் – பிரியா இருவரும் நடித்துள்ளனர். இந்த குறும்படத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த குறும்படத்தின் ட்ரெயிலர் வீடியோ லிங்க் : https://www.youtube.com/watch?v=gXOMXreZ-rc&t=50s