டிசம்பரில் ஷூட்டிங்.. சிவா - முருகதாஸ் கூட்டணிக்கு வலுசேர்க்கும் அந்த "சூப்பர் ஸ்டார்"? - SK23 அப்டேட் இதோ!
Sivakarthikeyan Movie : சின்னத்திரையில் இருந்து புறப்பட்டு இன்று வெள்ளித் திரையில் தனக்கென்று தனி முத்திரை பதித்து முன்னணி நடிகராக விளங்கிவரும் ஒருவர்தான் சிவகார்த்திகேயன். தான் தேர்வு செய்யும் திரைப்படங்களை மிக நேர்த்தியாக தேர்வு செய்து தனது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அழித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
Sivakarthikeyan Next Movie
அந்த வகையில் விரைவில் வெளியாக இருக்கும் அவருடைய "அயலான்" திரைப்படம் மற்றும் அண்மையில் வெளியான "மாவீரன்" திரைப்படமும் மக்கள் மத்தியிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. தற்போது ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய திரைப்படம் ஒன்றில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Darbar
இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம்வந்து கொண்டிருக்கும் ஏ.ஆர் முருகதாஸ் அவர்களுடன் ஒரு திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் இணைய உள்ளது அனைவரும் அறிந்ததே. தர்பார் படத்திற்கு பிறகு, முருகதாஸ் கடந்த மூன்று ஆண்டுகளாக இன்னும் திரைப்படங்களை இயக்கவில்லை. இந்நிலையில் ஒரு Come Back திரைப்படமாக சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கும் இந்த திரைப்படம் அமையும் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
Mohanlal
ஆகவே சிவகார்த்திகேயன் தற்பொழுது ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து பணிபுரிந்து வரும் பட பணிகள் விரைவில் முடிய உள்ளது என்றும், இதனால் வருகின்ற டிசம்பர் மாத இறுதியில் ஏஆர் முருகதாஸ் பட பணிகளை அவர் துவங்குவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவர்கள் நடிக்க உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் பிரபல நடிகர் வித்யுத் ஜம்வால் அவர்களும் இந்த படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.