- Home
- Gallery
- Sivakarthikeyan: ஒரே வருடத்தில் மூன்று படங்கள் ரிலீஸ்..ஹாட்ரிக் அடிக்கப்போகும் சிவகார்த்திகேயன்..
Sivakarthikeyan: ஒரே வருடத்தில் மூன்று படங்கள் ரிலீஸ்..ஹாட்ரிக் அடிக்கப்போகும் சிவகார்த்திகேயன்..
Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் டான், அயலான் மற்றும் மற்றும் எஸ்கே20 உள்ளிட்ட மூன்று திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

sivakarthikeyan
நடிகர் சிவகார்த்திகேயன் சிறந்த நடிகர் என்பதை தாண்டி, பாடலாசிரியர், தொகுப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு விளங்குகிறார். இவரின் படங்கள் பெரும்பாலும், குடும்பங்கள் கொண்டாடும் வகையில் நகைச்சுவையாக இருக்கும்.
sivakarthikeyan
சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் படம், சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இதையடுத்து, ரசிகர்களும் இவரது திரைப்படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் இவருக்கு, அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரிசை கட்டி கொண்டு தேடி வந்துள்ளனர். தற்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு மூன்று படங்கள் வெளியாக இருக்கின்றனர்.
sivakarthikeyan
அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கி உள்ள டான் திரைப்படம், ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த திரைப்படம் லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் காமெடி மற்றும் ஆக்ஷன் நிறைந்துள்ள படமாக உருவாகியுள்ளது.
sivakarthikeyan
இந்த படத்தில் ப்ரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனீஷ்காந்த், காளி வெங்கட், பால சரவணன், ஷிவாங்கி, ஆர்ஜே விஜய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.இந்த படம் ஏற்கனவே மார்ச்-25ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், இப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போனது. இதையடுத்து, இந்த திரைப்படம் வருகிற மே மாதம் 13ம் தேதி வெளியாகவுள்ளது.
sivakarthikeyan
இதையடுத்து, சிவகார்த்திகேயன் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் அனுதீப்.கே.வி இயக்கத்தில் 'எஸ்கே20' படம் வெளியாகவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தை வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
sivakarthikeyan
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், பிரேம்ஜி அமரன் மற்றும் நவீன் பாலிஷெட்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
Sivakarthikeyan
அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில், அயலான்' படம் வெளியாக உள்ளது. இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் மற்றும் கேஜெஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
Sivakarthikeyan
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக உருவாகி வரும் இந்த படத்தைய் டிசம்பர் மாதம் 23ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.