அடிப்பிடித்த பாத்திரத்தை சுலபமாக கழுவ சூப்பரான டிப்ஸ்!!
Burnt Utensils Cleaning : சமைக்கும்போது பாத்திரத்தில் அடிப்பிடித்து விட்டால் அதை சுலபமாக கழுவ சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சில சமயங்களில் நாம் சமைக்கும்போது பாத்திரம் அடிப்பிடித்து கருகிவிடும். அதை பலமுறை கழுவினாலும் கறை நீங்காது.
எனவே, அடிப்பிடித்த பாத்திரத்தில் இருக்கும் கரையை எளிதாக அகற்றவும், மீண்டும் உங்களது பாத்திரத்தை பிரகாசமாக சில டிப்ஸ்கள் இங்கே.
பேக்கிங் சோடா : அடிபிடித்த பாத்திரத்தில் பேக்கிங் சோடாவை தடவி, இரவு முழுவதும் அப்படியே வைத்து விட்டு, மறுநாள் காலை சோப்பினால் கழுவினால் பாத்திரம் பிரகாசமாகும்.
இதையும் படிங்க: 1 பைசா செலவில்லாமல் வீட்டில் தங்க நகைகளை பாலிஷ் செய்ய இப்படியும் ஒரு வழி இருக்கா?! வெறும் இரண்டே பொருள் போதும்
கொக்கோகோலா : கருகிப்போன பாத்திரத்தில் கொக்கோகோலாவை ஊற்றி, சுமார் 20 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவினால் கறைகள் நீங்கிவிடும்.
எலுமிச்சை மற்றும் உப்பு : அடிப்பிடித்த பாத்திரத்தில் எலுமிச்சை மற்றும் உப்பு கலந்து, சுமார் 15 நிமிடம் ஊற வைத்து, பிறகு கழுவினால் பாத்திரம் சுத்தமாகும்.
இதையும் படிங்க: வீட்டை இப்படி சுத்தம் செய்ங்க.. எப்போதும் பளபளனு இருக்கும்..!
தக்காளி சாஸ் : தக்காளி சாஸை கருகிப்போன பாத்திரத்தில் நன்கு தடவி, அப்படியே வைத்து விடுங்கள். அதில் இருக்கும் அமிலம் கறையை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கும்.பிறகு சோப்பு வைத்து கழுவி எடுத்தால் பாத்திரம் பளபளக்கும்.
சோப்பு நீர் : கருகிப் போன பாத்திரத்தை உடனே சோப்பு வைத்து தேய்க்காதீர்கள். அதற்கு பதிலாக சோப்பை நீரை அதில் ஊற்றி, அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்க வைத்து பின் கழுவினால் பாத்திரத்தை எளிதில் சுத்தமாகிவிடும்.