- Home
- Gallery
- Shruti Haasan : மூடிட்டு போடா... இன்ஸ்டாவில் வம்பிழுத்த வடக்கு நண்பருக்கு ஸ்ருதிஹாசன் கொடுத்த செருப்படி ரிப்ளை
Shruti Haasan : மூடிட்டு போடா... இன்ஸ்டாவில் வம்பிழுத்த வடக்கு நண்பருக்கு ஸ்ருதிஹாசன் கொடுத்த செருப்படி ரிப்ளை
நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், இன்ஸ்டாகிராமில் தன்னிடம் எடக்குமுடக்கான கேள்வி கேட்ட நெட்டிசனை வெளுத்து வாங்கி இருக்கிறார்.

Shruti Haasan
நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் தன் தந்தையை போலவே பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருகிறார். கோலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஸ்ருதி, அடுத்தடுத்து விஜய்யுடன் புலி, தனுஷுடன் 3, அஜித் ஜோடியாக வேதாளம், சூர்யாவுடன் சிங்கம் 3 போன்ற பிரம்மாண்ட படங்களில் நடித்தார். ஆனால் அவர் ஹீரோயினாக நடித்த படங்கள் பெருமளவில் வெற்றிபெறாததால் கோலிவுட்டில் ஸ்ருதிக்கு பட வாய்ப்புகள் குறைந்தன.
Kamal daughter Shruti Haasan
இதனால் கோலிவுட்டுக்கு டாட்டா காட்டிவிட்டு பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார் ஸ்ருதிஹாசன். குறிப்பாக தெலுங்கில் தன்னுடைய தந்தை வயது நடிகர்களாக இருக்கும் பாலகிருஷ்ணா மற்றும் சிரஞ்சீவி ஆகியோருக்கு ஜோடியாக நடித்த ஸ்ருதியை சிலர் கேலி கிண்டல் செய்தனர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை தட்டிதூக்கிய ஸ்ருதி, கடைசியாக பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தின் நடித்திருந்தார்.
இதையும் படியுங்கள்... மீண்டும் கார் ரேஸில் களமிறங்கிய அஜித்.. இணையத்தை தெறிக்க விடும் போட்டோஸ்.. அப்ப விடாமுயற்சி?
Shruti Haasan movies
நடிகை ஸ்ருதிஹாசனுக்கு வயது 38 ஆன போதிலும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே வலம் வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக சாந்தனு என்கிற டூடுல் கலைஞரை காதலித்து வந்த ஸ்ருதி அண்மையில் அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டார். தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கியுள்ள ஸ்ருதி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள கூலி படத்திலும் நடிக்க கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது.
shruti haasan Insta Story
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் கலந்துரையாடியபோது ரசிகர் ஒருவர், தென்னிந்திய பாசையில் ஏதாவது சொல்லுங்கள் என கேட்டிருந்தார். இந்த கேள்வியால் கடுப்பான ஸ்ருதி, இதுவும் ஒருவிதமான இனவாதம், இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தென்னிந்தியர்களை பார்த்து இட்லி, தோசை, சம்பார் என கிண்டலடிப்பது அழகானதல்ல. நகைச்சுவைக்காக கூட இதை செய்யாதீர்கள். அப்படி செய்தால் மூடிட்டு போடா என தென்னிந்திய பாசையில் சொல்லிவிடுவேன்” என தக் லைஃப் ரிப்ளை கொடுத்துள்ளார்.
Shruti Haasan Slams Shah Rukh khan
நடிகை ஸ்ருதி ஹாசன் இட்லி, தோசை சாம்பார் என குறிப்பிட்டு பேசியதற்கு பின்னணியில் ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவென்றால், அண்மையில் அம்பானி மகன் திருமண விழாவில் ஷாருக்கான் மேடையில் இருந்துகொண்டு நடிகர் ராம்சரணை அழைக்கும்போது, இட்லி, வடை, சாம்பார் என கூறி அழைத்தார். இப்படி தென்னிந்திய நடிகர்களை பொதுவிழாக்களில் இந்தி நடிகர்கள் தரக்குறைவாக பேசுவதற்கும் சேர்த்து தான் இந்த ஆவேச பதிவை போட்டுள்ளார் ஸ்ருதி.
இதையும் படியுங்கள்... ராஜகுமாரன் மட்டும் மிஸ்ஸிங்... தேவையானியின் பேமிலியோடு எடுத்த போட்டோவை பதிவிட்டு வாழ்த்து சொன்ன நகுல்