மெரினா பீச்சில் டிராபியுடன் போட்டோஷூட் நடத்திய ஷ்ரேயாஸ் – பேட் கம்மின்ஸ் – வேடிக்கை பார்த்த ரசிகர்கள்!
ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பேட் கம்மின்ஸ் இணைந்து டிராபியுடன் போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கியது. சென்னையில் தொடக்க விழா நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த 17ஆவது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final
இதில், சிஎஸ்கே வெற்றி பெற்றது. இதே போன்று நடைபெற்ற ஐபிஎல் 2024 தொடரின் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. பெங்களூருவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது.
KKR vs SRH, IPL 2024
இதையடுத்து, நடைபெற்ற முதல் குவாலிஃபையர் சுற்று போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில், கொல்கத்தா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
IPL Trophy Photoshoot
இதைத் தொடர்ந்து நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிஃபையர் 2 சுற்றுக்கு முன்னேறியது.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final
இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. சென்னையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. பின்னர், கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
IPL 2024 Final
இதன் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 3ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதில், ஒரு முறை சாம்பியனானது. ஒரு முறை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. இன்று நடைபெறும் ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 தொடரில் இரு அணிகளும் 2 முறை மோதியுள்ளன. இந்த 2 முறையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியே வெற்றி பெற்றிருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
KKR vs SRH, IPL 2024 Final
இந்தப் போட்டியைத் தொடர்ந்து இரு அணிகளும் முதல் குவாலிஃபையர் சுற்று போட்டியில் மோதின. இதில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு போட்டிகளிலும் கேகேஆர் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 3ஆவது முறையாக இரு அணிகளும் மோதுகின்றன. இந்தப் போட்டி ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி. சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியானது மழையால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
IPL 2024 Final Photoshoot
நேற்று சென்னையில் பரவலாக பெய்த மழையின் காரணமாக கேகேஆர் அணியானது பயிற்சி போட்டியை ரத்து செய்தது. இந்த நிலையில் தான் இரு அணி கேப்டன்களும் நேற்று ஐபிஎல் 2024 டிராபியுடன் போட்டோஷூட் நடத்தியுள்ளனர். சென்னை மெரினா பீச்சிற்கு சென்ற ஷ்ரேயாஸ் மற்றும் கம்மின்ஸ் இருவரும் டிராபியுடன் போட்டோஷூட் நடத்தியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.