Nayanthara: சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்திய நயன்தாரா! அடுத்த படத்திற்கு இத்தனை கோடியா? ஷாக் ஆகிடாதீங்க!
'ஜவான்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகை நயன்தாரா, தன்னுடைய சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவருடைய அடுத்த படத்தின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி திரையுலகை சேர்ந்தவர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
Lady Super star Nayanthara:
தமிழ் சினிமாவில், லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை தனதாக்கி கொண்டுள்ள நடிகை நயன்தாரா திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னரும் கூட, தொடர்ந்து முன்னணி நடிகையாக நடித்து அசத்தி வருகிறார்.
20 Years of Nayanthara in Cinema
ஏற்கனவே, கோலிவுட், டோலிவுட், மற்றும் மாலிவுட் திரையுலகில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்து கொண்டுள்ள இவர், இந்த ஆண்டு பாலிவுட் திரையுலகிலும் ஹீரோயினாக தடம் பதித்தார்.
Jawan Success:
இயக்குனர் அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் டபுள் ஆக்ஷனில் நடித்த 'ஜவான்' படத்தில் இளம் வயது ஷாருக்கானுக்கு ஜோடியாக, செம்ம ஸ்டைலிஷாக நடித்து வடஇந்திய ரசிகர்கள் மனதிலும் குடியேறினார். மேலும் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இவரை பாலிவுட் படங்களில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருவதாக கூறப்டுகிறது.
Nayanthara salary Details
ஏற்கனவே ஜவான் படத்தில் ஹீரோயினாக நடிக்க, 10 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கிய நயன்தாரா, இந்த படத்தை தொடர்ந்து... இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி படத்தில்... நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு சுமார் 13 கோடி வரை சம்பளமாக கேட்கிறாராம் நயன்.
Nayanthara Increase salary:
அதே இவரை சில தென்னிந்திய படங்களில் நடிக்க வைக்க முன்னணி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அணுகிய நிலையில்... அம்மணி தாறுமாறாக சம்பளத்தை உயர்த்தி கேட்பதால் தெறித்து ஓடுவதாக கூறப்படுகிறது.
Nayanthara Upcoming Movies:
எனினும் தற்போது இவரின் கைவசம், நயன்தாரா 75, டெஸ்ட், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 ஆகிய படங்கள் உள்ளது . அதே போல் ஜெயம் ரவிக்கு ஜோடியாக, தனி ஒருவன் 2 படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D