- Home
- Gallery
- வேத மந்திரத்துடன் கூடிய எம்பிராய்டரி லெஹங்காவில் கவனம் ஈர்த்த இஷா அம்பானி.. அதற்கு என்ன அர்த்தம்?
வேத மந்திரத்துடன் கூடிய எம்பிராய்டரி லெஹங்காவில் கவனம் ஈர்த்த இஷா அம்பானி.. அதற்கு என்ன அர்த்தம்?
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு நேற்று நடந்த சிவசக்தி பூஜையில் அம்பானி மகள் இஷா அம்பானி வழக்கம் போல தனது நேர்த்தியான உடை அலங்காரம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

isha ambani
ராதிகா மெர்ச்சண்ட் மற்றும் அனந்த் அம்பானி இந்த வாரம் திருமணம் செய்ய உள்ளனர். முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த், சிறுவயது தோழியும் நீண்ட நாள் காதலியுமான ராதிகாவை இன்று நடைபெற உள்ள ஆடம்பர விழாவில் திருமணம் செய்ய உள்ளார்.
isha ambani
இந்த திருமணத்தை முன்னிட்டு அம்பானி குடும்பத்தினர் நேற்று சிவசக்தி பூஜையை நடத்தினர். இதில் ஒட்டுமொத்த அம்பானி குடும்பத்தினரும் கலந்து கொண்ட நிலையில், அம்பானி மகள் இஷா அம்பானி வழக்கம் போல தனது நேர்த்தியான உடை அலங்காரம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
isha ambani
டெல்லியில் உள்ள டெல்லி விண்டேஜ் கோ என்ற டிசைனர் ஹவுஸ் இஷாவின் ஆடையை வடிவமைத்து கொடுத்துள்ளது. பழங்கால அலங்காரங்கள் மற்றும் இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் பளபளப்பான ரஸ்ட்-மெரூன் கலர் லெஹெங்காவி இஷா அம்பானி எப்போதும் போல் அழகாகத் தெரிந்தார்.
isha ambani
மரக்கன்றுகள், பசுக்கள் முதல் கலைப்பொருட்கள் வரை இந்திய கலாச்சாரத்தின் பல கூறுகளை சித்தரிக்கும் வகையில் லெஹெங்கா அலங்கரிக்கப்பட்டுள்ளது. லெஹங்காவின் பார்டரில் ஒரு குறிப்பிட்ட ஸ்லோகம் எழுதப்பட்டுள்ளது. இது கீதையில் இருந்து 'கர்மண்யே வாதிகராஸ்தே, மா பலேஷு கதா சனா' என்ற வாசகம் ஆகும். அதாவது உங்கள் செயல்களைச் செய்ய உங்களுக்கு உரிமை உண்டு, ஆனால் செயல்களின் பலனைப் பெற உங்களுக்கு உரிமை இல்லை என்பதே அதன் பொருள்.
isha ambani
தங்க நெக்லஸ், காதணிகள் மற்றும் வளையல்கள் என மிகவும் நேர்த்தியாக செய்யப்பட்ட மேக்கப் மூலம் இஷா தனது தோற்றத்தை மேலும் மேம்படுத்தினார்.
Anant Ambani and Radhika Merchant Wedding
ராதிகாவும் ஆனந்தும் தங்கள் திருமணத்திற்கு முன்னதாக ஒரு தொடர் சடங்குகளை ஏற்பாடு செய்தனர். சில நாட்களுக்கு முன், ஹல்தி விழா நடந்தது. அவர்களின் சங்கீத விழாவில் பாப் பாடகர் ஜஸ்டின் பீபரின் நிகழ்ச்சி இடம்பெற்றது. ஒரு மாமேரு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதாவது மாமேரு என்பது குஜராத்தி பாரம்பரியத்தை குறிக்கும் ஒரு சடங்காகும். இதில் தாய் மாமா மணமகளுக்கு திருமண பரிசை வழங்குவார்.
Anant Ambani and Radhika Merchant Wedding
இதற்கு முன், இரண்டு ஆடம்பரமான ப்ரீ வெட்டின் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. முதல் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம், ஜாம்நகரிலும், மற்றொன்று ஐரோப்பா முழுவதும் கப்பல் பயணத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.