48 வயதில் நாகினியாக மாறிய ஷில்பா ஷெட்டி... குஷி நடிகையின் குண்டக்க மண்டக்க கவர்ச்சியால் கன்பியூஸ் ஆன ரசிகர்கள்
மும்பையில் நடைபெற்ற பேஷன் விருது நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டி படு கவர்ச்சியான உடையில் கலந்துகொண்டு கவனத்தை ஈர்த்தார்.
shilpa shetty
90-களில் பாலிவுட் திரையுலகின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் ஷில்பா ஷெட்டி. இவர் 1993-ம் ஆண்டு வெளிவந்த பாசிகர் என்கிற பாலிவுட் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல்படத்திலேயே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த ஷில்பா ஷெட்டிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின.
bollywood actress shilpa shetty
சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பாலிவுட்டில் கொடிகட்டி பறந்த ஷில்பா ஷெட்டி, கடந்த 1996-ம் ஆண்டு தமிழில் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த மிஸ்டர் ரோமியோ படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்தார் ஷில்பா ஷெட்டி.
shilpa shetty age
தமிழில் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் குஷி. எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இப்படத்தில் மேக்கரினோ என்கிற ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் வந்து நடனமாடி இருந்தார். அப்பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. அதன்பின்னர் கோலிவுட்டுக்கு டாடா காட்டிவிட்டு பாலிவுட்டிலேயே ஐக்கியம் ஆனார்.
இதையும் படியுங்கள்... எல்லார் கண்ணும் இவங்க மேலதான்... தங்கச்சியின் திருமணத்தில் தகதகவென மின்னிய ரம்யா பாண்டியன் - வைரல் கிளிக்ஸ்
pooja hegde, shilpa shetty
நடிகை ஷில்பா ஷெட்டிக்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர் ராஜ்குந்த்ரா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். ஷில்பா ஷெட்டியின் கணவர் ஆபாச பட வழக்கில் கைதாகி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிறைவாசம் அனுபவித்தார்.
shilpa shetty hot photos
சினிமாவை போல் பல்வேறு தொழில்களையும் செய்து அதன்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார் ஷில்பா ஷெட்டி. இவர் ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல் என்கிற அணியின் உரிமையாளராக இருந்தார். 2009-2015-ம் ஆண்டு வரை அந்த அணியின் ஓனராக இருந்த ஷில்பா பின்னர் அதனை விற்றுவிட்டார்.
shilpa shetty glamour clicks
தற்போது 48 வயதாகும் ஷில்பா ஷெட்டி, இந்த வயதிலும் இளமை குறையாமல் அழகை பராமரித்து வருகிறார். சமீபத்தில் மும்பையில் நடந்த பேஷன் விருது விழாவில் இடுப்பழகை முழுசாக காட்டியபடி வந்து அதிர்ச்சி கொடுத்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இதென்ன நாகினி டிரெஸ் மாதிரி இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர். ஷில்பா ஷெட்டியின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... நார்த் முதல் சவுத் வரை... பாக்ஸ் ஆபிஸில் அடிச்சு நொறுக்கும் ஜவான் - அதுக்குள்ள ஓடிடியில் ரிலீஸா? லீக்கான தகவல்