யாஷிகா பாதி.. ஹன்சிகா மீதி; ஷாரிக்கின் காதலி மரியாவின் கியூட் வெட்டிங் போட்டோஸ்!
நடிகர் ரியாஸ் கான் மகன் ஷாரிக் ஹாசனுக்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. நீண்ட நாள் காதலியான மரியா ஜெனிபரை கரம் பிடித்த ஷாரிக்கு, திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Uma and Riyaz khan son Shariq Hassan
நட்சத்திர ஜோடிகளான உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஆகியோரின் மூத்த மகன் ஷாரிக் ஹாசனுக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி, திருமணம் நடந்த முடிந்த நிலையில் இது குறித்த சில க்யூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Uma is Daughter of Actress Kamala Kamesh
பழம்பெரும் நடிகை கமலா காமேஷின் மகள் உமா, பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கானை காதலித்து கரம் திருமணம் செய்துகொண்டவர். திருமணம் ஆகி பல வருடங்கள் ஆனாலும், தற்போது வரை இவர்கள் கியூட்டான நட்சத்திர ஜோடிகளாக வலம் வருகிறார்கள்.
ஒரே ஒரு பொய்! நடிகை மீனாட்சியை திட்டம் போட்டு தீர்த்து கட்டிய நண்பர்கள்! பதற வைக்கும் Flash Back!
Uma Riyaz Have 2 Son's
இந்த ஜோடிகளுக்கு, இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகனான ஷாரிக், தன்னுடைய பெற்றோரைப் போலவே நடிகராக ஆர்வம் காட்டி வருகிறார். அதன்படி 2016-ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 'பென்சில்' படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு வில்லனாக மிரட்டல் பர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தி இருந்தார் ஷாரிக்.
Shariq Hassan is an Actor
பின்னர் 'உக்கிரம்' என்கிற படத்தில் ஷாரிக் நடித்த நிலையில் அந்த படம் வெளியாகாமல் போனது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'DON' படத்தில் தேஜா என்கிற ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.
இதை மட்டும் ஜெயலலிதாவால் கட்டுப்படுத்தவே முடியாதாம்! சந்தோஷமா இருந்தால் என்ன செய்வாங்க தெரியுமா?
Shariq Hassan Marry to Lover Maria
மேலும் ஜிகிரி தோஸ்த், நேற்று இந்த நேரம், போன்ற படங்களில் ஹீரோவாக நடித்திருந்த ஷாரிக்... தற்போது ரெசார்ட் என்கிற படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி ஷாரிக் தன்னுடைய நீண்ட நாள் காதலியான மரியா ஜெனிபர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
Shariq Hassan and Maria Wedding Photos
இவர்களின் திருமணம், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்... கிருஸ்துவ முறைப்படி நடந்துள்ளது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தி உள்ளனர். குறிப்பாக உமா ரியாஸ் நடித்து வரும் சீரியலில் நடிக்கும் பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
'தங்கலான்' படத்தை இந்த 5 காரணங்களுக்காக கண்டிப்பாக பார்க்கவேண்டும்!
Christian type of Wedding
அமோகமாக நடந்த இந்த திருமணத்தின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில், தற்போது ஷாரிக்கின் காதலில், மாமனார் ரியாஸ் கானின் கைகளை பிடித்து கொண்டு, திருமணம் நடக்கும் இடத்திற்கு வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Maria look like Yashika and Hansika
மரியாவை பார்த்து ரசிகர்கள் பலர் ஹன்சிகா மற்றும் யாஷிகாவை கலந்து செய்த கலவை போல் இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வரும் அந்த புகைப்படங்கள் இதோ.
மயோசிட்டிசால் திரையுலகில் இருந்து விலக நினைத்த சமந்தா.! மீட்டெடுத்த 5 விஷயங்கள்..!