MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சண்முகம் வீட்டிற்குள் போதை பொருள்.. சௌந்தரபாண்டி சூழ்ச்சியால் நடக்க போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!

சண்முகம் வீட்டிற்குள் போதை பொருள்.. சௌந்தரபாண்டி சூழ்ச்சியால் நடக்க போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!

Anna Serial Update : தமிழ் சின்னத்திரை உலகில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் தர்மகத்தா தேர்தலில் நிற்க போவதாகவும் முடிந்தால் ஜெயித்து காட்டு என சௌந்தரபாண்டிக்கு சவால் விட்ட நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

2 Min read
Ansgar R
Published : Dec 30 2023, 03:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Mirchi senthil

Mirchi senthil

அதாவது, பாக்கியம் பதறியடித்து கொண்டு ஷண்முகம் வீட்டிற்கு வர, என்னாச்சு என்று கேட்கின்றனர், ஷண்முகம் இந்த தேர்தலில் நிற்க உள்ள விஷயத்தை சொல்கிறாள். உடனே பரணி அதான் அவன் நிற்க மாட்டேன்னு சொல்லிட்டானே என்று கேட்க, இல்ல அவன் நிற்க போறதா சொல்லிட்டான். இப்போதைக்கு அவர் கிட்ட இருக்கிறது இந்த தர்மகத்தா பதவி ஒன்னு தான், இதையும் பிடுங்க அவர் விட மாட்டாரு.

மூன்றாவது முறை.. மாஸ் நடிகருக்கு பக்காவா ஒரு ஸ்கெட்ச் போடும் லோகேஷ் கனகராஜ் - தலைவர் 171 வில்லன் அவர் தானா?

23
Anna Serial Update

Anna Serial Update

இதுக்காக அவர் கொலை கூட பண்ணுவாரு, அதனால் இந்த தேர்தலில் நிற்க வேண்டாம்னு சொல்லுங்க என்று சொல்லி விட்டு போக ஷண்முகம் வந்ததும் தங்கைகள் இந்த தேர்தலில் நிற்க வேண்டாம் என சொல்கின்றனர். ஆனால் ஷண்முகம் தனது முடிவில் உறுதியாக இருக்க பரணி நான் சொல்றேன் நீ நிற்க கூடாது என்று சொல்ல ஷண்முகம் இந்த ஒரு விஷயத்துல உன் பேச்சை நான் கேட்க மாட்டேன் என்று சொன்னதும் பரணி அப்படினா என்கிட்ட பேசாத என்று கோபித்து கொண்டு சென்று விடுகிறாள். 

அதன் பிறகு வீட்டில் சௌந்தரபாண்டி முருகன் நகையெல்லாம் எடுத்து பார்த்து இது முருகன் நகையாக இருந்தாலும் இப்போ என் நகை, யார் கேட்டாலும் இதை கொடுக்க மாட்டேன் என்று பேச சனியன் இப்போ என்ன பண்றது என்று கேட்க சௌந்தரபாண்டி முத்துபாண்டிக்கு போன் போட்டு போதை பொருளை வீட்டில் வைத்து போதை பொருள் கடத்தல் கேஸில் கைது செய்ய சொல்லி சொல்கிறார். 

33
Poovilangu Mohan

Poovilangu Mohan

முத்துப்பாண்டி நீங்க போதை பொருளை வைக்கிற வேலையை பாருங்க மற்றவற்றை நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி போனை வைக்க ஒருத்தன் மூலமாக பான் பிராக் பெட்டிகளை எடுத்து வர சொல்லி அதை மளிகை சாமான் என்று சொல்லி ஷண்முகம் வீட்டில் இறக்கி வைக்கின்றனர். ஹாஸ்பிடலில் இருக்கும் பரணியை ஷண்முகம் வீட்டிற்கு கூட்டி வர செல்ல அவள் உன்கூட வர மாட்டேன் என்று நடந்து வருகிறாள். 

வீட்டிற்கு வந்ததும் மூட்டைகள் இருப்பதை பார்த்து என்னவென்று கேட்க மளிகை சாமான், நீ தான் கொண்டு வர சொன்னதா சொல்லி இறக்கி வச்சிட்டு போனாங்க என்று சொல்ல ஷண்முகம் நான் சொல்லலையே என்று சந்தேகம் அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாருங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
அண்ணா (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved