MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Indian 2: ஒரு பாட்டுக்கு மட்டும் 30 கோடி செலவு.. அடேங்கப்பா இந்தியன் 2 படத்தின் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா?

Indian 2: ஒரு பாட்டுக்கு மட்டும் 30 கோடி செலவு.. அடேங்கப்பா இந்தியன் 2 படத்தின் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா?

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Ganesh A
Published : Jun 27 2024, 10:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Indian 2 Kamal

Indian 2 Kamal

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தில் கமல்ஹாசன் உடன் ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த், காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இந்தியன் 1 படத்தில் தமிழ்நாட்டில் நடக்கும் ஊழல்களை மட்டும் தட்டிக்கேட்ட இந்தியன் தாத்தா, அதன் இரண்டாம் பாகத்தில் இந்தியா முழுவதும் இருக்கும் ஊழல்வாதிகளை களையெடுப்பார் என கூறப்படுகிறது.

24
Indian 2 Movie Stills

Indian 2 Movie Stills

இந்தியன் முதல் பாகத்தை காட்டிலும் அதன் இரண்டாம் பாகம் படு பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கினார் இயக்குனர் ஷங்கர். பிக்பாஸ் மேடையில் இப்படத்திற்கான அறிவிப்பு வந்தது. அதன்பின்னர் ஷூட்டிங் ஸ்பாட் விபத்தில் மூன்று பேர் பலியானதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது, பின்னர் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஷூட்டிங் தடைபட்டது. இப்படி அடுத்தடுத்த தடங்கல்களால் தயாரிப்பாளர் - இயக்குனர் இடையே மோதல் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கைவிடும் நிலைக்கே சென்றது இந்தியன் 2.

இதையும் படியுங்கள்... Pawan Kalyan : ராம் சரணிடம் வட்டிக்கு கடன் வாங்கி ஏமாற்றிய பவன் கல்யாண்... ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது..!

34
Indian 2 Movie Release

Indian 2 Movie Release

இறுதியாக உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கிடப்பில் கிடந்த இப்படத்தை தூசி தட்டி எடுத்தது. லைகா நிறுவனத்துடன் இணைந்து இந்தியன் 2 படத்தை எடுத்துள்ளது. இப்படத்தில் இயக்குனர் ஷங்கர் பிரம்மாண்டத்தில் எந்தவித குறையும் வைக்கவில்லை என்பது ட்ரைலரை பார்க்கும் போதே தெள்ளத்தெளிவாக தெரிகிறது. சுமார் 7 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் ஒரு வழியாக திரைக்கு வர உள்ளது இந்தியன் 2 திரைப்படம். வருகிற ஜூலை 12ந் தேதி அப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

44
Indian 2 movie Budget

Indian 2 movie Budget

இந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் வியக்கவைக்கும் பட்ஜெட் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி சுமார் ரூ.250 கோடி பட்ஜெட்டில் இந்தியன் 2 திரைப்படம் தயாராகி உள்ளதாம். குறிப்பாக ஒரு பாடல்காட்சிக்கு மட்டும் ரூ.30 கோடி செலவு செய்து படமாக்கி இருக்கிறாராம் ஷங்கர். இதுவே இந்தியன் முதல் பாகத்தின் பட்ஜெட்டை விட டபுள் மடங்கு ஆகும். கடந்த 1996-ம் ஆண்டு வெளிவந்த இந்தியன் படத்தின் முதல் பாகம் ரூ.15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...  லாஜிக் இடிக்குதே.. 106 வயசுல இந்தியன் தாத்தாவால் எப்படி சண்ட போட முடியும்? சர்ச்சைக்கு ஷங்கர் கொடுத்த விளக்கம்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கமல்ஹாசன்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved