- Home
- Gallery
- 300 கோடியில் பிரைவேட் ஜெட் முதல் 40 கோடி மதிப்புள்ள ஃபாரின் பங்களா வரை... அம்பானி மகனுக்கு வந்த காஸ்ட்லி Gifts
300 கோடியில் பிரைவேட் ஜெட் முதல் 40 கோடி மதிப்புள்ள ஃபாரின் பங்களா வரை... அம்பானி மகனுக்கு வந்த காஸ்ட்லி Gifts
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் ஜோடியின் திருமணத்திற்கு பிரபலங்கள் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்ஸ் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ambani son wedding
உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு தன்னுடைய மகனின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி முடித்திருக்கிறார் அம்பானி. அவரின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் கடந்த ஜூலை 13ந் தேதி மும்பையில் வைத்து கோலாகலமாக நடைபெற்றது. இதில் உலக நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து முன்னணி திரை நட்சத்திரங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
anant ambani - radhika
அம்பானி வீட்டு திருமணம் முடிந்து இரண்டு வாரங்கள் ஆனாலும் அதைப் பற்றிய பேச்சு இன்னும் அடங்கியபாடில்லை. அந்த வகையில் தற்போது அம்பானி மகன் திருமணத்தில் கலந்துகொண்ட பாலிவுட் பிரபலங்கள் மற்றும் பல்வேறு தொழிலதிபர்கள் வழங்கிய விலையுயர்ந்த பரிசுகள் குறித்த விவரம் இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளன.
anant ambani wedding gifts
அந்த வகையில், மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் ஆனந்த் அம்பானி - ராதிகா ஜோடியின் திருமணத்தில் கலந்துகொண்ட கையோடு அந்த ஜோடிக்கு ஒரு பிரைவேட் ஜெட்டையும் பரிசாக வழங்கினாராம். அதன் மதிப்பு ரூ.300 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் அமேசான் சிஇஓ ஜெப் பெசாஸ் ரூ.11.5 கோடி மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக வழங்கியதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ஆனந்த் - ராதிகா திருமணத்தின் போது தூங்கி விழுந்த அம்பானியின் மூத்த மருமகள்.. வைரல் வீடியோ..
anant ambani received costly gifts
இதுதவிர பாலிவுட் பிரபலங்களும் தங்கள் பங்கிற்கு பரிசுகளை வாரி வழங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், அம்பானி மகனுக்கு பிரான்ஸில் ஒரு சொகுசு அபார்ட்மெண்டை பரிசாக வழங்கினாராம். அதன் மதிப்பு ரூ.40 கோடி என கூறப்படுகிறது. அமிதாப் பச்சன் குடும்பத்தினர் ரூ.30 கோடி மதிப்பு எமரால்டு ஆபரணத்தை பரிசாக கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
shah rukh khan at anant ambani wedding
ஆலியா பட், ரன்பீர் கபூர் ஜோடி ரூ.9 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் காரை கிஃப்டாக கொடுத்துள்ளார்களாம். சல்மான் கான் ரூ.15 கோடி மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் பைக் வழங்கினாராம். ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே ஜோடி ரூ.20 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரையும், அக்ஷய் குமார் ரூ.60 லட்சம் மதிப்பிலான தங்க பேனாவையும் வழங்கினார்களாம். கத்ரீனா கைஃப் - விக்கி கெளஷல் ஜோடி ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்க செயினையும், சித்தார்த் மல்கோத்ரா - கியாரா அத்வானி ஜோடி ரூ.25 லட்சம் மதிப்பிலான ஷாலையும் பரிசாக கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... Anant Ambani Wedding: திருமணத்திற்கு வந்த பிரபலங்களின் கைகளில் கலர் கலராக பேண்ட் கட்டிவிட்ட அம்பானி குடும்பம்