MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Gallery
  • புதுப்படங்களால் ஒரு வாரம் கூட தாக்குபிடிக்க முடியல... ஆனா ஒரு படம் 29 வருஷமா தியேட்டரில் ஓடுது- அது என்ன படம்?

புதுப்படங்களால் ஒரு வாரம் கூட தாக்குபிடிக்க முடியல... ஆனா ஒரு படம் 29 வருஷமா தியேட்டரில் ஓடுது- அது என்ன படம்?

இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் 25 நாட்கள் ஓடினாலே அதிசயமாக இருக்கும் நிலையில், 29 ஆண்டுகளாக ஒரு படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 05 2024, 12:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
cinema Theatre

cinema Theatre

சினிமாத்துறை தற்போது பன்மடங்கு வளர்ச்சியை கண்டுவிட்டது. ஆனால் முந்தைய காலத்தை போல் இன்றைய சினிமா இல்லை என்பது பலராலும் மறுக்க முடியாத உண்மை. முன்பெல்லாம் ஒரு படம் 200 நாட்கள் அசால்டாக ஓடிவிடும். பின்னர் போகப்போக 100 நாள் ஓடினாலே ஆச்சர்யமாக இருந்தது. தற்போதைய காலகட்டத்தில் ஒரு படம் 25 நாட்கள் ஓடினாலே அபூர்வமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதற்கு ஓடிடியும் ஒரு முக்கிய காரணம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
maratha mandir theatre

maratha mandir theatre

ஒரு படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன ஒரே மாதத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆகிவிடுகிறது. இதனால் பெரும்பாலானோர் தியேட்டருக்கு வர விரும்புவதில்லை. பெரிய நடிகர்களின் படங்கள் இதில் இருந்து தப்பித்தாலும், சின்ன படங்கள் தான் இந்த ஓடிடிகளால் படாதபாடு படுகின்றன. சின்ன படங்கள் ஒரு வாரத்திற்கு மேல் தியேட்டரில் ஓடினாலே ஆச்சர்யம் தான். தற்போது ரிலீஸ் ஆகும் படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. வாரத்திற்கு நான்கு அல்லது ஐந்து புதுப்படங்கள் ரிலீஸ் ஆகிவிடுகின்றன.

இதையும் படியுங்கள்... போட்டியின்றி சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகிறது விஜய் சேதுபதியின் 50-வது படம் ‘மகாராஜா’ - ரிலீஸ் தேதி இதோ

34
DDLJ

DDLJ

இப்படி ஒரு வாரத்திற்கு கூட புதுப்படங்கள் தாக்குப்பிடிக்க முடியாத இந்த காலகட்டத்தில் ஒரு கிளாசிக் ஹிட் படம் 29 ஆண்டுகளாக ஒரு தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா. அது தான் உண்மையும் கூட. அப்படி 29 ஆண்டுகளாக வெற்றிநடைபோட்டு வரும் கிளாசிக் ஹிட் படம் தான் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே'. ஷாருக்கான், கஜோல் நடித்த இப்படம் கடந்த 1995-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அன்றில் இருந்து இன்று வரை ஒரு தியேட்டர் மட்டும் இப்படத்தை தினசரி திரையிட்டு வருகிறது.

44
Dilwale Dulhania Le Jayenge

Dilwale Dulhania Le Jayenge

மும்பையில் உள்ள மராத்தா மந்திர் என்கிற திரையரங்கில் தான் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' திரைப்படம் தினசரி திரையிடப்பட்டு வருகிறது. தினசரி காலை 11.30 மணிக்கு மேட்னி ஷோவில் மட்டும் இப்படம் திரையிடப்படுகிறது. இவர் இப்படி தொடர்ந்து திரையிட, அதற்கு கிடைத்து வரும் வரவேற்பு தான் காரணமாம். வார நாட்களில் 50 முதல் 60 டிக்கெட்டுகளும், வார இறுதி நாட்களில் 500 முதல் 600 டிக்கெட்டுகள் வரை புக் ஆகிறதாம். மேட்னி ஷோவுக்கு மட்டும் இந்த படத்தை திரையிட்டுவிட்டு, பின்னர் எஞ்சியுள்ள மூன்று ஷோக்களும் புதுப்படங்களை திரையிடுவதை இந்த திரையரங்க நிர்வாக வழக்கமாக கடைபிடித்து வருகிறதாம்.

இதையும் படியுங்கள்... விபத்தால் எல்லாம் மறந்து போச்சு! கை விரித்த மருத்துவர்கள்.. வேதனையை பகிர்ந்த விஜய் டிவி நடிகை அஸ்ரிதா!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஷாருக் கான்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved