MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அன்று பிளாட்பார்மில் தங்கியவர்; இன்று 6300 கோடிக்கு அதிபதி! 9 வருஷமா ஒரு ஹிட் கூட இல்ல; அந்த Superstar யார்?

அன்று பிளாட்பார்மில் தங்கியவர்; இன்று 6300 கோடிக்கு அதிபதி! 9 வருஷமா ஒரு ஹிட் கூட இல்ல; அந்த Superstar யார்?

தங்க கூட இடமின்றி பிளாட்பார்மில் தூங்கியவர் தற்போது சினிமாவில் சூப்பர்ஸ்டாராக இருப்பதோடு 6300 கோடி சொத்துக்கு அதிபதியாகவும் இருக்கிறார். 

2 Min read
Ganesh A
Published : Jun 05 2024, 10:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
shah rukh khan

shah rukh khan

சினிமா பலரது வாழ்க்கையை புரட்டி போட்டு இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆனாலே ஈஸியாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்துவிடும். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன் நிலைமை தலைகீழாக இருந்தது. பட வாய்ப்பு தேடி அலைய வேண்டும். சினிமா ஆசையில் வீட்டை விட்டு ஓடி வந்து கஷ்டப்பட்ட நடிகர்கள் ஏராளம். அப்படி கஷ்டப்பட்டு முன்னேறி இன்று இந்தியாவின் பணக்கார நடிகராக வலம் வரும் ஒருவரை பாற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

25
Actor shah rukh khan

Actor shah rukh khan

அவர் வேறு யாருமில்லை நம்முடைய பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் தான். இன்று பாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகராக திகழ்ந்து வருகிறார் ஷாருக்கான். சல்மான் கான், அமீர்கான் போன்ற ஜாம்பவான் நடிகர்களுக்கு மத்தியில் தனக்கென ஒரு தனி ஸ்டைலை உருவாக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக வலம் வருகிறார் ஷாருக்கான். கடின உழைப்பால் முன்னேறிய ஷாருக்கான் இன்று ரூ.6300 கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளார். பாலிவுட்டின் மற்ற கான் நடிகர்களை விட இவரிடம் தான் அதிகளவு சொத்துக்கள் உள்ளன.

இதையும் படியுங்கள்... Jailer 2 : ஜெயிலர் 2-வில் இணையும் ரஜினியின் ஜிகிரி தோஸ்து... அப்போ மாஸ் சம்பவம் உறுதி..!

35
shah rukh khan Net Worth

shah rukh khan Net Worth

மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்த ஷாருக்கான், டெல்லியில் தன் பள்ளிப் படிப்பை முடித்தார். அதன்பின்னர் கல்லூரியில் இருந்து பாதியில் விலகிய அவர் நடிக்கும் ஆசையில் மும்பைக்கு வந்துவிட்டார். ஆரம்பத்தில் மும்பையில் தங்க கூட இடம் கிடைக்காமல் சாலையோர பிளாட்பார்மிலும், ரயில்வே ஸ்டேஷனிலும் தங்கிய ஷாருக்கான், இன்று மும்பையின் ஹாட்ஸ்பாட் ஏரியாவில் மன்னட் என்கிற அரண்மனை போன்ற வீட்டை கட்டி இருக்கிறார். அதன் மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் இருக்குமாம்.

45
shah rukh khan Movies

shah rukh khan Movies

ஷாருக்கானின் கேரியரில் 2014 முதல் 2023 ஜனவரி மாதம் வரை சுமார் 9 ஆண்டுகள் ஒரு இருண்ட காலம் என்றே சொல்லலாம். ஏனெனில் அந்த காலகட்டத்தில் அவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியை தழுவின. அதிலும் ஜீரோ என்கிற படத்தின் படுதோல்விக்கு பின்னர் சுமார் 5 ஆண்டுகள் அவர் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. அதன்பின்னர் 2023-ம் ஆண்டு பதான், ஜவான் மற்றும் டங்கி என ஹாட்ரிக் ஹிட் படங்கள் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார் ஷாருக்கான்.

55
shah rukh khan Upcoming Movies

shah rukh khan Upcoming Movies

இதில் ஜவான், பதான் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தன. கடைசியாக ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அவர் நடித்த டங்கி படம் ரூ.470 கோடி வசூல் ஈட்டியது. தற்போது ஷாருக்கான் நடிப்பில் கிங் என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் தன்னுடைய மகள் சுஹானா கான் உடன் முதல் முறையாக நடிக்கிறார் ஷாருக்கான். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.

இதையும் படியுங்கள்... தேர்தலில் மாஸ் வெற்றி... முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த விஜய் - ஆனா பாஜக, திமுகவுக்கு இல்ல.. யாருக்கு தெரியுமா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஷாருக் கான்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved