ஷாம் முதல் விஜய் சேதுபதி வரை.. ஹிட் படங்களில் சின்ன ரோலில் நடித்து, இன்று சூப்பர் நடிகரான டாப் 5 ஹீரோஸ்!
Kollywood Heroes : இன்று கோலிவுட் திரை உலகில் மிகப்பெரிய நட்சத்திரங்களாக வலம்வரும் பல நடிகர்கள் ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தவர்கள் தான் என்பது பலரும் அறிந்த உண்மை.
Actor Shaam
தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான ஒரு திரைப்படம் தான் "குஷி". அந்த திரைப்படத்தில் யாருமே மறக்க முடியாத ஒரு காட்சி என்றால், விஜயும், ஜோதிகாவும் அந்த அகல் விளக்கை அணையாமல் காக்கின்ற காட்சி தான். அந்த காட்சியில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார் பிரபல நடிகர் ஷ்யாம். அதன்பிறகு பல நல்ல திரைப்படங்களில் நடித்த அவர் இன்று தமிழ் திரை உலகின் மூத்த மற்றும் முன்னணி ஹீரோவாக திகழ்கிறார்.
vimal
அதேபோல தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான மற்றொரு படம் தான் "கில்லி". அந்த திரைப்படத்தில் விஜயின் நண்பர்களாக பலர் நடித்திருப்பார்கள். குறிப்பாக அந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் விமல், விஜயின் நண்பராக நடித்திருப்பார். இப்பொழுது பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை அவர் கொடுத்து வருகிறார்.
vijay sethupathi
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மெகா ஹிட் திரைப்படம் தான் "புதுப்பேட்டை", ஆனால் அந்த ஒரு படமட்டுமல்ல, "வெண்ணிலா கபடி குழு", "நான் மகான் அல்ல", "பலே பாண்டியா" மற்றும் "சுந்தரபாண்டியன்" போன்ற பல வெற்றித்திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து இன்று மாபெரும் நடிகராக உள்ளவர் தான் விஜய் சேதுபதி.
soori
நடிகர் ரகுமான் நடிப்பில் மெகா ஹிட்டான "சங்கமம்" திரைப்படம் தொடங்கி "உள்ளம் கொள்ளை போகுதே", "ரெட்", "வின்னர்" மற்றும் "தீபாவளி" போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து, இன்று ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்துள்ளவர் தான் பிரபல நடிகர் சூரி. சினிமாவில் இவர் லைட் மேனாகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.
vidharth
பிரபல நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான திரைப்படம் தான் குருவி. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்யோடு இணைந்து அவரது தந்தையை காப்பாற்ற சிலர் போராடுவார்கள். அதில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார் பிரபல நடிகர் விதார்த். பிரபு சாலமனின் மைனா திரைப்படத்திற்கு பிறகு அவர் மிகப்பெரிய நடிகராக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.