- Home
- Gallery
- Sharanya : தங்கமயிலுக்கு என்ன ஆச்சு? முட்டியில் கட்டோடு ரெஸ்ட் எடுக்கும் சரண்யா துராதி - ஆறுதல் சொல்லும் Fans!
Sharanya : தங்கமயிலுக்கு என்ன ஆச்சு? முட்டியில் கட்டோடு ரெஸ்ட் எடுக்கும் சரண்யா துராதி - ஆறுதல் சொல்லும் Fans!
Actress Sharanya Turadi : சின்னத்திரை நாடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் புகழ் பெற்ற நடிகை தான் சரண்யா துராதி. இப்பொது அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் நடித்து வருகின்றார்.

Sharanya
செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய நடிகை தான் சரண்யா துராதி சுந்தர்ராஜ். சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சின்னத்திரை நாடகங்களில் இவர் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
Actress Sharanya
குறிப்பாக இப்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தில், "தங்கமயில்" என்கின்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார். தெலுங்கு மொழியிலும் சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.
Pandian Stores Actress
"நெஞ்சம் மறப்பதில்லை" என்ற நாடகத்தில் சரண்யா விக்ரம் என்கின்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அந்த சீரியல் தான் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது என்றே கூறலாம். அதன்பிறகு "ஆயுத எழுத்து" என்கின்ற நாடகத்திலும் இவர் நடித்தார்.
Pandian stores actress Sharanya
பைக் ஓட்டுவதை தனது பொழுதுபோக்காக கொண்டுள்ள நடிகை சரண்யா துராதி, இப்பொழுது தனது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அதிலிருந்து தான் மீண்டு வரும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.