MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • காதலுக்கு எதிர்ப்பு; மிரட்டலுக்கு பயந்து விஜய் டிவி பிரபலத்தை ரகசியமாக 2-வது திருமணம் செய்த சீரியல் நடிகை தீபா

காதலுக்கு எதிர்ப்பு; மிரட்டலுக்கு பயந்து விஜய் டிவி பிரபலத்தை ரகசியமாக 2-வது திருமணம் செய்த சீரியல் நடிகை தீபா

விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை தீபாவுக்கு முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், அவர் ரகசியமாக 2-வது திருமணம் செய்துகொண்டுள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Sep 05 2023, 12:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Deepa 2nd marriage

Deepa 2nd marriage

விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தீபா. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில், முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். இதையடுத்து சீரியல்களில் நடித்து வந்த தீபாவுக்கு கணேஷ் பாபு என்பவருடன் காதல் மலர்ந்தது. அவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் தயாரிப்பு மேலாளராக பணியாற்றி வந்தார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
serial actress Deepa

serial actress Deepa

தீபா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பதால், அவரை திருமணம் செய்துகொள்ள கணேஷ் பாபுவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி அவரது குடும்பத்தினர் தீபாவை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வந்த இந்த ஜோடி, குடும்பத்தினர் சமாதானம் ஆகாததால், ரகசியமாக பதிவு திருமணம் செய்துகொண்டது.

இதையும் படியுங்கள்... ஷங்கர் மகள் அதிதியின் அடுத்த டார்கெட் விஜய்யா?... ரோல்ஸ் ராய்ஸ் காரில் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரல்

34
Deepa marriage

Deepa marriage

இவர்கள் இருவருக்கும் பதிவு திருமணம் நடந்து பல மாதங்கள் ஆனால் தற்போது தான் அது வெளியே தெரியவந்துள்ளது. திருமண விஷயம் வெளியானதும், கணேஷ் பாபு உடன் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு ரொமான்ஸ் செய்து வருகிறார் தீபா. 

44
Deepa husband sai ganesh babu

Deepa husband sai ganesh babu

சீரியல் நடிகை தீபா ரகசியமாக இரண்டாம் திருமணம் செய்துகொண்டுள்ளது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதே சமயம் அவர் தனது இரண்டாவது கணவர் சாய் கணேஷ் பாபு உடன் மாலையும் கழுத்துமாக நிற்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு இந்த வாழ்க்கை நன்றாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... செம்ம மாஸா இருக்கே... இத ஏன் படத்துல வைக்கல? ஜெய் பீமில் இப்படி ஒரு சண்டைக் காட்சியா? வைரலாகும் டெலிடெட் சீன்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved