- Home
- Gallery
- குடும்பத்தோடு இணைந்த ஆல்யா மானசா.. கணவர் கொடுத்த ஸ்வீட் ஷாக் - மகிழ்ச்சியில் அவர் வெளியிட்ட பிக்ஸ்!
குடும்பத்தோடு இணைந்த ஆல்யா மானசா.. கணவர் கொடுத்த ஸ்வீட் ஷாக் - மகிழ்ச்சியில் அவர் வெளியிட்ட பிக்ஸ்!
Alya Manasa : பிரபல சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா, தனது குடும்பத்தாரோடு இணைந்து தன் கணவரின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

Alya Daughter
நடன நிகழ்ச்சி மூலம் தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கிய ஆல்யா மானசா, "ராஜா ராணி" என்கின்ற தொடரின் மூலம் சின்னத்திரை நாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார் அவர்.
sanjeev karthick and alya
இந்த சூழலில் தான், தன்னோடு இணைந்து நடித்த பிரபல சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் என்பவரை தீவிரமாக காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார் Alya Manasa. இப்போது இந்த அழகிய இளம் ஜோடிக்கு, ஒரு மகனும், மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. சில வாரங்களுக்கு முன்பு பிரம்மாண்டமான தங்களது புது வீட்டில் குடிபெயர்ந்தனர் இந்த அழகிய குடும்பம்.
sanjeev karthick
என்ன தான் மகிழ்ச்சியாக இருவரும் வாழ்ந்து வந்தாலும், பெற்றோரை எதிர்த்துத் தான் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆல்யா மானசா. ஆகவே அவர்கள் பெற்றோரை பிரிந்து தான் இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்து வந்தார் என்பதும் பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.
sanjeev
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சஞ்சீவ் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், தனது மனைவிக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுக்க முடிவு செய்த அவர், ஆல்யா மானசாவின் பெற்றோரிடம் பேசி, அவர்களை சம்மதிக்க வைத்து, தங்களது புது இல்லத்திற்கு அவர்களை அழைத்துவந்துள்ளார்.
Alya
இந்நிலையில் தனது பெற்றோர்களோடு மீண்டும் இணைந்துள்ள ஆல்யா மானசா, தனக்கு அனைத்தையும் கொடுத்த தன் கணவர் சஞ்சீவிக்கு தங்கள் வீட்டிலேயே பிறந்தநாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
சின்ன வயசுல தம்பிய பாசமா பாத்துக்கோங்க... தனுஷ் பற்றி பச்சையாகப் பேசி சிரிக்க வைத்த செல்வராகவன்!