செப்டம்பர் மாதம் ராசி பலன்கள் 2024 : 12 ராசியில் யாருக்கும் அதிஷ்டம்.. வேதனை யாருக்கு?
September Month Rasi Palan 2024 : செப்டம்பர் மாதத்தில் சூரிய பகவான், புதன் பகவான், சுக்கிர பகவான் ஆகிய மூன்று கிரகங்களும் பெயர்ச்சியாக உள்ளதால் 12 ராசிக்கும் எந்த மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
மேஷம் : செப்டம்பர் மாதத்தில் மேஷ ராசிக்காரர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருக்கும். இருப்பினும், உங்களுக்கு நிதி நன்மைகள் கிடைக்கும். உங்களது வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும் தயாராக இருங்கள்.
ரிஷபம் : செப்டம்பர் மாதம் ரிஷப ராசிக்கு தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களது உழைப்பு வீண் போகாது, நல்ல வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு இம்மாதம் சாதகமாக இருக்கும்.
மிதுனம் : செப்டம்பர் மாதம் மிதுன ராசிக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். மேலும், இம்மாதம் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். செய்யும் வேலையை புத்தியுடன் செய்யுங்கள். வியாபாரிகளுக்கு மற்றும் காதல் உறவுகளுக்கு சாதகமான மாதம். குடும்ப வாழ்க்கையில் பரஸ்பர நல்லிணக்கம் குறையும்.
கடகம் : செப்டம்பர் மாதம் கடக ராசிக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். இம்மாதத்தில் நீங்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். எனவே, கவனமாக இருங்கள். வேலி சம்பந்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உங்களது வருமானம் அதிகரிக்கும்.
சிம்மம் : செப்டம்பர் மாதம் சிம்ம ராசிக்கு பல வழிகளில் நன்மைகள் கிடைக்கும். இம்மாதம் தொழிலில் வெற்றியை காண்பீர்கள். உங்களது நிதிநிலைமை நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கன்னி : செப்டம்பர் மாதம் கன்னி ராசிக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த மாதம். இம்மாதம் உங்களது நிதி நிலைமை மேம்படும், இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு இம்மாதம் சிறப்பான மாதமாகும். வணிக பயணங்கள் வெற்றிகரமாக முடியும்.
துலாம் : செப்டம்பர் மாதம் துலாம் ராசிக்கு செலவுகள் நிறைந்த மாதமாகும். இம்மாதம் நீங்கள் சில உடல்நல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வேலை செய்பவர்களுக்கு இம்மாதம் சாதகமாக இருக்கும். கடின உழைப்பின் மூலம் வெற்றியை காண்பீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம் : செப்டம்பர் மாதம் விருச்சிக ராசிக்கு சாதகமாகவும், நன்மைகள் நிறைந்ததாகவும் இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். வேலையில் சிறப்பான வெற்றியை காண்பீர்கள். உங்களது வருமானம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
தனுசு : செப்டம்பர் மாதம் தனுசு ராசிக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். வேலையில் கவனம் செலுத்துங்கள். இல்லையெனில், பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளர்களுடன் நல்ல உறவை மேம்படுத்துங்கள், இல்லையெனில் பிரச்சனைகள் வரும்.
மகரம் : செப்டம்பர் மாதம் மகர ராசிக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த மாதமாக இருக்கும். குறிப்பாக ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது. மாதத்தின் தொடக்கத்தில் தொழிலில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்து இருக்கும். இம்மாதம் நீங்கள், வியாபாரத்தில் ஒரு புதிய ஒப்பந்தங்களை பெறலாம்.
கும்பம் : செப்டம்பர் மாதம் கும்ப ராசிக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் இம்மாதம் வருமானத்தில் நல்ல உயர்வை காண்பீர்கள். செய்யும் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும்.
மீனம் : செப்டம்பர் மாதம் மீன ராசிக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்து இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.