இலவசமாக ஆதார் அட்டையை அப்டேட் செய்ய இது தான் லாஸ்ட் சான்ஸ்.! யாரெல்லாம் புதுப்பிக்க வேண்டும் தெரியுமா.?
இந்தியாவில் சுமார் 40 லட்சம் பேர் ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கவில்லை. செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் இலவசமாக ஆதாரை புதுப்பிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அருகில் உள்ள ஆதார் சேவா மையம் அல்லது https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளம் மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம்.
முக்கிய அடையாளமாக மாறிய ஆதார்
ஆதார் எண் தான் தற்போது இந்தியாவின் முதன்மை அடையாள சான்றாக மாறி உள்ளது. அரசின் சலுகைகளை பெறுவதில் இருந்து பல முக்கிய ஆவணங்கள் பெறுவதற்கு ஆதார் எண் முக்கிய தேவையாக உள்ளது. இந்தியாவில் உள்ள எந்தவொரு நபரும் வயது, பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், ஆதார் எண்ணைப் பெற தானாக முன்வந்து பதிவு செய்யலாம். பிறந்த குழுந்தைகள் முதல் ஆதார் எண் முக்கிய தேவையாக உள்ளது.
இன்று அமெரிக்காவிற்கு பறக்கும் ஸ்டாலின்.! பயண திட்டம் என்ன தெரியுமா.? யாரையெல்லாம் சந்திக்கிறார்.?
யாருக்கெல்லாம் ஆதார்
எந்தவொரு தனிநபரும் ஆதாருக்கு ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய முடியும். ஒரு தனிநபரின் பேரில் ஒரே ஒரு ஆதார் மட்டுமே உருவாக்கப்படும். ஆதார் அட்டையில் இந்திய குடிமகனின் பெயர், பிறந்த தேதி, பாலினம், குடியிருப்பு முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். ஆதாரில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அருகில் உள்ள ஆதார் மையத்தில் அப்டேட் செய்து கொள்ளலாம்.
10ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட்
இந்தநிலையில் ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு அறிவித்திருந்தது. தற்போது நாடு முழுவதும் 140 கோடியே 21 லட்சத்து 68 ஆயிரத்து 849 பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர். இதில் 100 கோடியே 14 லட்சத்து 12 ஆயிரத்து 413 பேர் மட்டுமே ஆதார் அட்டையை புதுப்பித்துள்ளனர்.
Special Train : மதுரை டூ தாம்பரம் சிறப்பு ரயில் அறிவிப்பு.! முன்பதிவு தொடங்கியதா.?
இலவசமாக அப்பேட் செய்ய அவகாசம்
எனவே ஆதார் அட்டை பெற்று 10 ஆண்டுகள் ஆகியும் புதுப்பிக்காத நபர்கள் அப்டேட் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. இருந்த போதும் சுமார் 40 கோடி பேர் புதுப்பிக்கவில்லையென தகவல் வெளியானது. இதனையடுத்து இலவசமாக வருகிற செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் ஆதாரை புதுப்பிக்க மீண்டும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி அருகில் உள்ள ஆதார் சேவா மையத்திலோ அல்லது இணையதளம் மூலம் https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்திலும் புதுப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 14ஆம் தேதி கடைசி நாள்
ஆதார் மையத்தில் விரல் ரேகை, கருவிழியை புதுப்பித்து கொள்வதன் மூலம் தேவையான இடங்களில் ஆதார் அட்டையை உறுதி செய்வதற்கான தடைகள் எதுவும் இல்லாமல் எளிதாக அனுமதி கிடைக்கும். இந்தநிலையில் வருகிற செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் புதுப்பிக்க தவறினால் கட்டணம் செலுத்தி தான் இனி புதுப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.