கூட்டணிக்காக காத்திருக்கும் சீமான்.! கதவை திறப்பாரா விஜய்.?
தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாம் தமிழர் கட்சி, ஒவ்வொரு தேர்தலிலும் திமுக மற்றும் அதிமுகவிற்கு போட்டியாக களம் இறங்கினாலும், வாக்கு சதவிகிதம் மட்டுமே அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு தேர்தலில் நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க சீமான் திட்டமிட்டுள்ளார்.
seeman
திராவிட கட்சிகளுக்கு டப் கொடுக்கும் சீமான்
தமிழகத்தில் திமுக - அதிமுகவிற்கு போட்டியாக இளைஞர் மத்தியில் வேகமாக வளர்ந்து வரும் கட்சி நாம் தமிழர் கட்சி, கடந்த 2010ஆம் ஆண்டு சீமான் தலைமையில் தொடங்கிய கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் 3வது அல்லது 4வது இடத்தை பிடித்து வருகிறது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சில் மயங்கி இன்றைய கால இளைஞர்கள் அவரை பின் தொடர தொடங்கியுள்ளனர். அந்த அளவிற்கு வேகமாக மற்ற கட்சிகளுக்கு நாம் தமிழர் கட்சி டப் கொடுத்து வருகிறது. இருந்த போதும் மிகப்பெரிய கட்சியான திமுக மற்றும் அதிமுகவிற்கு போட்டியாக களம் இறங்கினாலும் வாக்குகள் என்பது பெரும் வித்தியாசம் உள்ளது.
seeman
உயரும் வாக்கு சதவிகிதம்
ஒவ்வொரு தேர்தலிலும் 8 முதல் 10 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று வருகிறது. இதனால் தேர்தல் வெற்றி என்பது சாத்தியமில்லாமல் மாறிவிட்டது. இந்தநிலையில் தான் 2026ஆம் ஆண்டு தேர்தலை குறிவைத்து நடிகர் விஜய் களம் இறங்கவுள்ளார். வருகிற 22ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் விஜய் இந்தாண்டு இறுதிக்குள் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். இதற்கான பணிகளை கட்சி நிர்வாகிகள் தொடங்கியுள்ளனர்.
விஜய் அரசியல் கட்சி
2026ஆம் ஆண்டு நடிகர் விஜய் களத்தில் இறங்கினாலும் திமுக மற்றும் அதிமுகவை வீழ்த்தும் வகையில் 30 சதவிகித வாக்குளை வாங்குவார் என்றால் சற்று சந்தேகம் தான் எனவே தனது தமிழக வெற்றிக்கழகம் தலைமையில் புதிய கூட்டணியை அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கூட்டணியில் நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை இணைக்க இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. கூட்டணியா அல்லது தனித்து போட்டியா என்பது தொடர்பான முடிவு பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
சட்டமன்ற தேர்தல் கூட்டணி.?
இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யோடு இணைந்து தேர்தலில் களம் இறங்க சீமான் திட்டமிட்டு வருகிறார். ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு சதவிகிதம் மட்டுமே அதிகரிக்கும் நிலையில் வெற்றிபெற முடியாத நிலை உள்ளது. இந்தநிலையில் தான் விஜய் கூட்டணிக்காக சீமான் காத்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் சீமான்,
விஜய்க்காக காத்திருக்கும் சீமான்
2026 ல் கூட்டணியா ? தனித்து போட்டியா ? என்ற கேள்விக்கு செப்டம்பர் மாதம் தம்பி விஜய் கட்சி பணியை தொடங்குகிறார். விஜய் உடன் கூட்டணியா என்ற கேள்விக்கு இது குறித்து தம்பி விஜய் தான் முடிவெடுக்க வேண்டும். அண்ணன் தயாரா என்ற கேள்விக்கு தம்பி தான் முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டேனே என பதில் அளித்தார். எனவே விஜய்யின் கூட்டணி கதவு எப்போது திறக்கும் என சீமான் காத்துள்ளார்.