ஷாக்கிங் நியூஸ்! இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு! எந்த மாவட்டத்திற்கு? என்ன காரணம் தெரியுமா?
இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Emanuel Sekaran Memorial Day
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஆண்டு தோறும் செப்டம்பர் 11ம் தேதியன்று இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை குருபூஜையாக கொண்டாடப்படுகிறது. அதேபோல், பசும்பொன் பகுதியில் அக்டோபர் 30ம் தேதியன்று முத்துராமலிங்க தேவரின் நினைவு தினத்தை குருபூஜையாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Ramanathapuram District Collector
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செப்டம்பர் 11-ல் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் அக்டோபர் 30-ம் தேதி கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழச்சிகளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு செப்டம்பர் 9 முதல் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
Ramanathapuram District 144
இந்த உத்தரவால் மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள் நடத்தவும், பொது இடங்களில் 5 பேர் மற்றும் அதற்கு மேற்பட்டோர் ஒன்று சேரவும் அனுமதியில்லை. மேலும் மாவட்டத்தில் செப்டம்பர் 9 முதல் 15-ம் தேதி வரையும், அக்டோபர் 25 முதல் 31-ம் தேதி வரையும் வெளிமாவட்டங்களில் இருந்து அனைத்து வகையான வாடகை வாகனங்கள், திறந்த வெளி வாகனங்கள், இருசக்கர வாகனங்களில் தலைவர்களின் நினைவு, பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கு அஞ்சலி , மரியாதை செலுத்த ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வர அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.