School Holiday: பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை தொடர்பான குட்நியூஸ்.. வெளியான அறிவிப்பு!
அனைத்து வகை பள்ளிகளுக்கு ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காது சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
School Student
2024 - 2025ம் கல்வியாண்டில் ஜுன் 1ம் தேதி அல்லது ஜுன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால், மக்களை தேர்தல் முடிவு மற்றும் கடுமையான வெப்பம் காரணமாக பள்ளிகள் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த விடுமுறைகளை ஈடுசெய்யும் விதமாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடப்பு கல்வியாண்டில் 20 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு வந்தன.
Saturday Working Day
இந்நிலையில் வழக்கம் போல் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை விட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டது. அதில் அரசு ஊழியர்களைப் போன்று இனி ஆசிரியர்களுக்கும் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என்ற அறிவிப்பை வெளியிடுமாறு தங்களை வேண்டுகிறோம்.
Saturday Holiday
இந்த முடிவினை விரைந்து எடுக்க சற்று காலதாமதம் ஆகும் என்று நீங்கள் கருதினால் அதுவரை ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமையும் நான்காம் சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு குறிப்பாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்ற அறிவிப்பை உடனடியாக வெளியிடுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
School Education Department
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றிக்கையில்: 2024 - 2025ம் கல்வியாண்டு நாட்காட்டியில் ஆகஸ்ட் 2வது சனிக்கிழமை மற்றும் 4வது சனிக்கிழமை பள்ளி வேளை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஆகஸ்ட் மாதத்தில் 2வது சனிக்கிழமை மற்றும் 4வது சனிக்கிழமை பள்ளி வேளை நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.