சனி வக்ர பெயர்ச்சி 2024 : எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள் இவையே..!
Saturn Retrograde In Aquarius 2024 : நீதியின் கடவுளாக கருதப்படும் சனி பகவான், கும்ப ராசியில் இருந்து வக்ர நிலையில் பின்னோக்கி நகரவுள்ளார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சனி பகவான் ஒரே ராசியில் நீண்ட காலம் இருக்கும். தற்போது கும்ப ராசியில் இருக்கும் சனி பகவான், இன்று இரவு 12.35 மணிக்கு கும்ப ராசியில் இருந்து வக்ர நிலையில் பின்னோக்கி நகரவுள்ளார். சனியின் இந்த வக்ரகநிலை நவம்பர் மாதம் வரை இருக்கும்.
மேலும் சனியின் வக்ர பெயர்ச்சியால், சில ராசிக்காரர்களுக்கு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த சனியின் வக்ர பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்: சனியின் வக்ர பெயர்ச்சியால், இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை மற்றும் பல தொல்லைகள் வரும் குடும்பத்தில் சண்டை சச்சரவுகளும் வரும். நீங்கள் கடினமாக உழைத்தும் அதற்கான பலன் உங்களுக்கு கிடைக்காது. இருந்தாலும், முயற்சியை ஒருபோதும் கைவிடாதீர்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.
கடகம்: சனியின் வக்ர பெயர்ச்சியால், இந்த ராசிக்காரர்கள் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் இந்த காலகட்டத்தில் உங்களது செலவுகள் அதிகரிக்கும். இதனால் நிதி சுமை ஏற்படும். அது மட்டுமின்றி, இதனால் குடும்பத்தில் மன அழுத்தமும் ஏற்படும்.
இதையும் படிங்க: இந்த ராசிக்காரர்கள் ஏழரை சனி காலத்தில் கூட அமோகமாக இருப்பார்களாம்.. ஏன் தெரியுமா?
கன்னி: சனியின் வக்ர பெயர்ச்சியால், இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்யும் வேலைக்கு உங்களுக்கு வருமானம் கிடைத்தாலும், செலவுகள் கூடும். நீங்கள் செய்யும் தொழிலில் லாபம் கிடைக்காது. ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
இதையும் படிங்க: சனியால் ஜூன் 30ஆம் தேதி முதல் பணமழையில் நனைய போகும் 5 அதிஷ்ட ராசிகள்...!
விருச்சகம்: சனியின் வக்ர பெயர்ச்சியால், இந்த ராசிக்காரர்கள் நீங்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு வேலை பளு அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே எதிர்பார்த்த பலன் கிடைக்கும். நிதிநிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது. இதனால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். திருமண வாழ்க்கையில் மன கசப்புகள் ஏற்படும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D