MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 பைனல்... நடுவர்களை மெர்சலாக்கி லட்சக்கணக்கில் பரிசுகளை வென்றது யார் தெரியுமா?

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 பைனல்... நடுவர்களை மெர்சலாக்கி லட்சக்கணக்கில் பரிசுகளை வென்றது யார் தெரியுமா?

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பைனலில் யார் யார் வெற்றிபெற்றார்கள் என்பதையும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை பற்றியும் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 18 2023, 06:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
saregamapa lil champs season 3

saregamapa lil champs season 3

தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் விரும்பப்படும் சிங்கிங் ரியாலிட்டி ஷோவாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஜீ தமிழின் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் கடந்த டிசம்பர் 17-ம் தேதி மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இறுதி போட்டியில் இடம் பெற்ற ஆறு போட்டியாளர்களுக்கு இடையே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் போட்டி நிலவியது. 

25
Kilmisha

Kilmisha

முதல் ரவுண்டில் மக்கள் தேர்வு செய்த பாடலை பாடிய போட்டியாளர்கள் இரண்டாவது ரவுண்டில் இந்த சரிகமப நிகழ்ச்சியில் இதுவரை தேர்வு செய்யாத சவாலான பாடல்களை தேர்வு செய்து பாடினர். போட்டியின் இறுதியில் இலங்கையை சேர்ந்த ஈழத்து தமிழ் பெண்ணான கில்மிஷா டைட்டிலை வெல்ல சிறப்பு விருந்தினராக பங்கேற்ற யுவன் ஷங்கர் ராஜா கில்மிஷாவிற்கு கோப்பையை வழங்கி கவுரவப்படுத்தினார். 

35
Ruthresh

Ruthresh

மேலும் அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து முதல் ரன்னர் அப்-ஆக வெற்றி பெற்ற ருத்ரேஷ் குமாருக்கு 3 லட்சம் ரூபாயும் இரண்டாவது ரன்னர் அப்-ஆக வெற்றி பெற்ற சஞ்சனாவிற்கு இரண்டு லட்சம் ரூபாயும் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. ரிக்ஷிதா மூன்றாவது ரன்னர் அப்-ஆகவும் வெற்றி பெற்றுள்ளார்.

45
Sanjana

Sanjana

ஒவ்வொருவரும் தனித்துவமான குரலில் பாடி மனதை கவர்ந்ததாக யுவன் ஷங்கர் ராஜா பாராட்டு தெரிவித்தார். போட்டி முழுவதிலும் நடுவர்களின் கவனத்தை ஈர்த்து டைட்டிலை வென்ற கில்மிஷா தமிழக மக்கள் கொடுத்த அன்பிற்கும் ஆதரவிற்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்து கொண்டார். அதோடு நடுவர்களாக பங்கேற்ற ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி, அபிராமி, கார்த்திக் ஆகியோர் கொடுத்த ஊக்கம் தான் எனது வெற்றிக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

55
Rikshitha

Rikshitha

மிகப்பெரிய வரவேற்புடன் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து வரும் டிசம்பர் 23-ம் தேதி முதல் டான்ஸ் ஜோடி டான்ஸ் reloaded சீசன் 2 தொடங்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இசை திறமையை கொண்டாடிய மக்களுக்கு சாமானிய போட்டியாளர்களின் நடன திறமையை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ‘முதல் மரியாதை’ ரம்யா கிருஷ்ணன் நடிக்க வேண்டிய படமா..! பாரதிராஜா ஓகே சொல்லியும் மிஸ் ஆனது எப்படி?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved