MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • வரலட்சுமி திருமணத்திற்கு சூப்பர் ஸ்டாரை ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த சரத்குமார் - ராதிகா!

வரலட்சுமி திருமணத்திற்கு சூப்பர் ஸ்டாரை ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த சரத்குமார் - ராதிகா!

வரலட்சுமி சரத்குமாருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு திருமண அழைப்பிதழ் வைத்துள்ளனர். இதுகுறித்த புகைப்படத்தை தற்போது வரலட்சுமி சரத்குமார் பகிர்ந்துள்ளார். 

1 Min read
manimegalai a
Published : Jun 06 2024, 06:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் சினிமாவில் தன்னுடைய தந்தை சரத்குமாரை தொடர்ந்து... இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய 'போடா போடி' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். இவரது முகம் ஹீரோயின் ஃபேஸ் இல்லை என சில விமர்சனங்கள் வெளியானதால், தமிழில் பட  வாய்ப்பு கிடைக்காமல் போனது.

24

இதை தொடந்து தெலுங்கு, கன்னடம், போன்ற தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்த துவங்கினார். மற்ற மொழிகளில் நடித்தாலும், வரலட்சுமிக்கு தமிழில் சிறந்த நடிகையாக மாற வேண்டும் என்பதே கனவாக இருந்த நிலையில், நடிகை சங்கீதா சிவாரிசு செய்ய இயக்குனர் பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' படத்தில் ஹீரோயினாக மாறினார். விமர்சன ரீதியாக வெற்றிபெற்ற இப்படம் வசூல் ரீதியாக வெற்றிபெற தவறியது.

Kalki 2898 AD Trailer: கல்கி 2898 AD திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் எப்போது? படக்குழு வெளியிட்ட தகவல்!

34

ஆனால் வரலட்சுமிக்கு சிறந்த கம்பேக்காக அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து விக்ரம் வேதா, சர்க்கார், போன்ற பல படங்களில் குணசித்ர வேடத்திலும், வில்லியாகவும் நடித்து மிரட்டி இருந்தார். ஹீரோயின்  என்பதை தாண்டி வெயிட்டான ரோல்களில் நடித்து வரும் வரு, ஒருவழியாக...  சமீபத்தில் காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

44

நிக்கோலாய் சச்தேவ் என்கிற மும்பையை சேர்ந்த தொழிலதிபரை காதலித்து கரம் பிடிக்க உள்ள வரலக்ஷ்மியின்  திருமணம் அடுத்த மாதம் (ஜூலை 2-ஆம் தேதி) தாய்லாந்தில் நடைபெற உள்ளதாகவும் பின்னர் லீலா பேலஸில் திருமண வரவேற்பு நடைபெறும் என் கூறப்பட்டது. இதை தொடர்ந்து திருமண பத்திரிக்கை வைப்பதில் பிஸியாக இருக்கும் சரத்குமார் குடும்பத்தினர், இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொன்ன பிரபலத்தை பழிவாங்கிட்டேன்! 'சிறகடிக்க ஆசை' சீரியல் நாயகி கூறிய ஷாக்கிங் தகவல்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
திருமணம்
ரஜினிகாந்த்
வரலட்சுமி சரத்குமார்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved